ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ஆம் தேதி உலக சிக்கன நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1924 ஆம் ஆண்டு இத்தாலியின் மிலான் நகரில் நடந்த சர்வதேச சேமிப்பு வங்கி மாநாட்டின் போது அக்டோபர் 31ஆம் தேதியை உலக சிக்கன தினமாக அறிவித்தனர். இருப்பினும் 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி நம் நாட்டின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதால் இந்தியாவில் அக்டோபர் 30ஆம் தேதி உலக சிக்கன தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பொழுதெல்லாம் உழைத்து களைத்து கிடைத்த வருமானத்தில் அன்றைய பொழுதை கழித்த பின்னர் மீதமுள்ள பணத்தை அடுத்த நாளைக்காக கிழிந்து போன ஆடையில் முடிந்து கொள்ளும் வறுமையில் செம்மையான வாழ்க்கை நடத்துகின்றவர்களின் சேமிப்பு பழக்கம் என்பது வங்கிகளிலும் இல்லாத ஆச்சரியப்படுத்தும் சேமிப்பு திட்டமாகும். ஆக சேமிப்பின் முந்தைய நிலை சிக்கனம் என்று சொன்னால் மிகை ஆகாது. சிக்கனம் இருந்தால் தான் சேமிக்க முடியும் என்பதே யதார்த்தமான உண்மை.
வாழ்க்கையில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என தெரியாது. எதிர்கால வாழ்க்கைக்கு சேமிப்பு மிக அவசியம். சம்பாதிப்பதை விட அதை சேமிப்பது அவசியம். சேமிப்பு என்பது பணத்தை சேமிப்பது மட்டுமல்ல. மின்சாரம், உணவு, குடிநீர், இயற்கை வளங்கள் என பலவற்றை உள்ளடக்கியது. சிக்கனமும் சேமிப்பும் ஒரு குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பங்கு வகிக்கிறது. சேமிப்பை வலியுறுத்தி அக். 30ல் உலக சிக்கன தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1924ல் இத்தாலியில் சர்வதேச சேமிப்பு வங்கிகளின் மாநாட்டில் இத்தினம் உருவாக்கப்பட்டது.
கடந்த 1924-ம் ஆண்டு இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்ற சர்வதேச சேமிப்பு வங்கிகளின் சிக்கன மாநாடு நடைபெற்றது. உலகின் பல சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மாநாட்டுக்குப் பிறகு, மக்கள் அனைவரும் சிக்கனத்தை அறிய வேண்டுமென, உலக சிக்கன தினம் என ஒரு தினம் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகிறது. சேமிப்பு, சிக்கனம் போன்றவைபற்றி மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்பதே இத்தினம் உருவாக்கப்பட்டதற்கு முக்கிய நோக்கமாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement