இந்த உலக கோப்பையை இந்தியா வெல்லவில்லை என்றால் 15 வருஷத்துக்கு வாய்ப்பில்லை – ரவிசாஸ்திரி

உலக கோப்பையில் இந்திய அணி லீக் சுற்றை வெற்றிகரமாக முடித்திருக்கிறது. இந்த உலக கோப்பை தொடரில் ஒரு தோல்வி கூட பெறாமல் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கும் ஒரே அணி இந்தியா தான். 9 லீக் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறது. ஒரு உலக கோப்பையில் தோல்வியே சந்திக்காமல் அதிக வெற்றிகளை பெற்றிருப்பது இதுவே இந்திய அணிக்கு முதல் முறை. இதற்கு முன்பு அதிகபட்சமாக 7 வெற்றிகளை இந்திய அணி பெற்றிருக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் அதிக வெற்றிகளை பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கும் இந்திய அணி இம்முறை உலக கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது.

கடைசியாக 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பையை இந்திய அணி கேப்டன் எம்எஸ் தோனி தலைமையில் வென்றது. அதன்பிறகு நடைபெற்ற இரண்டு உலக கோப்பையில் லீக் போட்டியில் சிறப்பாக ஆடி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தாலும் அதில் தோல்வியை தழுவியதால் உலக கோப்பை கனவு கனவாகே போனது. ஆனால் இம்முறை கிட்டியிருக்கும் அருமையான வாய்ப்பை தவற விடக்கூடாது என்பதில் இந்திய அணி தீர்க்கமாக இருக்கிறது. அதனால் தான் 9 லீக் போட்டிகளிலும் பெரிய அளவில் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யாமல் செட்டாக இருக்கும் இந்திய அணியே கத்துக்குட்டி அணியாக இருந்தாலும் களமிறங்கிக் கொண்டிருக்கிறது. பரிசோதனையை உலக கோப்பை தொடரில் இதுவரை இந்திய அணி செய்யாமல் இருப்பதில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும்.

இந்நிலையில், இந்த உலக கோப்பையை வெல்வதற்கு இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதில் அளித்துள்ளார்.  அவர் பேசும்போது இந்திய அணி இப்போது மிகவும் உட்சபட்ச பார்மில் இருக்கிறது. இப்போது உலக கோப்பையை இந்திய அணி வெல்லாவிட்டால், இன்னும் இரண்டு மூன்று உலக கோப்பைகள் வரை காத்திருக்க வேண்டும். இந்திய அணியில் விளையாடிக் கொண்டிருப்பவர்களில் 8க்கும் மேற்பட்ட வீரர்கள் உட்சபட்ச பார்மில் இருக்கிறார்கள். அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடுகிறார்கள். இப்படியான அணி உலக கோப்பையை வெல்லாவிட்டால், அடுத்த இரண்டு மூன்று உலக கோப்பையை நினைக்க வேண்டாம் என தெரிவித்திருக்கிறார். 

பேட்டிங்கில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஆகியோர் உட்சபட்ச பார்மில் இருக்கிறார்கள். பந்துவீச்சில் முகமது ஷமி, பும்ரா மற்றும் சிராஜ், ஜடேஜா, குல்தீப் ஆகியோர் தங்கள் வாழ்நாளில் மிகச் சிறப்பான பார்மில் இருக்கிறார்கள் என்றும் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். அதனால் இந்திய அணி இந்த உலக கோப்பையை பிரகாசமாக வாய்ப்பு இருக்கிறது என கூறியிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.