இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் வீழ்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புதவற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் இரண்டாவது தினத்தில் (15) கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்தார்.
இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் சமுர்த்தி மும்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் சமுர்த்தியை இவ்வாறு அதிகரித்தமை தவறானது. சமுர்த்தி ஆரம்பிக்கப்பட்டு தற்போது 35 வருடங்களாகின்றன.
நாட்டில் பொருளாதாரச் சிக்கல் மீண்டும் ஏற்படாதிருப்பதாயின் அப் பொருளாதாரத்தை மீண்டும் உருவாக்க வேண்டும். நமக்கு புதிய மக்கள் சபை அவசியமாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்:
பிராஜைகளின் உரிமை, ஜனநாயக மற்றும் அரசமயமாக்கல் தொடர்பாக புதிய பாதைக்குக் கொண்டு செல்லும் தீர்மானத்தை நேற்று வழங்கியதாகக் குறிப்பிட்டார். இம்முக்கோண விவாதம் இன்று நேற்று ஆரம்பித்ததன்றி கடந்த 30 வருட யுத்தம் வரை சென்றதாகத் தெளிவுபடுத்தினார். உயர் நீதிமன்றம் ஜனாதிபதியொருவருக்கு தண்டனை வழங்கிய மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
அன்று ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வராவிட்டால் இன்று ஜனநாயம் இருந்திருக்காது. ஒரு லீற்றர் பெற்றோலுக்குப் போராடிய நாடு இது. எரிவாயு வரிசையில் நின்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்த நாடு இது. பொருளாதாரத்தின் வேகம் போதாது என்று அதன் வேகத்தை எதிர் மறையான பெறுமதிக்கு வீழ்ந்த நாட்டின் பொருளாதாரம் இன்று முன்னேற்றமடைந்து வருவதாக பேசப்படுகிறது.