உலகின் பல பகுதிகளிலும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
இதனிடையே தீபாவளி தினத்தன்று ஆல்பாபெட் மற்றும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருக்கும் சுந்தர் பிச்சை தனது தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு தீபாவளி பண்டிகை குறித்து மக்கள் கூகுளில் அதிகம் தேடிய ஐந்து கேள்விகளை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் தற்போது அவை இணையத்தில் வைரலாகி வருகிறது.
Happy Diwali to all who celebrate! We’re seeing lots of interest about Diwali traditions on Search, here are a few of the top trending “why” questions worldwide: https://t.co/6ALN4CvVwb pic.twitter.com/54VNnF8GqO
— Sundar Pichai (@sundarpichai) November 12, 2023
அந்தப்பதிவில் இந்தியர்கள் ஏன் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்? என்ற கேள்வி கூகுள் தேடலில் முதலிடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து தீபாவளி அன்று நாம் ஏன் ரங்கோலி போடுகிறோம், தீபாவளி அன்று நாம் ஏன் விளக்குகளை ஏற்றுகிறோம், தீபாவளி அன்று லக்ஷ்மி பூஜை செய்வது ஏன்? தீபாவளி அன்று ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்? போன்ற 5 கேள்விகள் கூகுளில் மக்கள் அதிகமாக தேடிய கேள்விகளாக இருக்கிறது.
இதனைத்தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த மதன் மோகன் ராம் என்ற புகைப்பட கலைஞர் தீபாவளியன்று கூகுள் பிக்சல் போனை பயன்படுத்தி புகைப்படம் ஒன்றை எடுத்திருக்கிறார்.
அந்த புகைப்படத்தை சுந்தர் பிச்சை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மதன் மோகன் ராமிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அந்தப் புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.