Opening of Sabarimala Walk: Mandal period begins today | சபரிமலை நடை திறப்பு: மண்டல காலம் இன்று தொடக்கம்

சபரிமலை, மண்டல கால
பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று
அதிகாலை 3:00 மணிக்கு நடைதிறந்து நெய்யபிஷேகத்துடன் மண்டல காலம்
தொடங்குகிறது.
சபரிமலையில் நேற்று மாலை 5:00 மணிக்கு நடை
திறக்கப்பட்டது.மேல்சாந்தி (பொறுப்பு) நாராயணன் போற்றி நடை திறந்து
தீபம் ஏற்றி 18 படிகள் வழியாக சென்று ஆழிகுண்டத்தில் நெருப்பு
வளர்த்தார்.
தொடர்ந்து 18 படிகளின் கீழ் நின்ற புதிய மேல் சாந்திகள்
சபரிமலை – பி.என். மகேஷ், மாளிகைபுறம்- பி.ஜி.முரளி ஆகியோரை
கைபிடித்து சன்னதிக்கு அழைத்து வந்தார். அவர்களுக்கு திருநீறு
பிரசாதம் வழங்கப்பட்டது.
இரவு 7:00 மணிக்கு தந்திரி கண்டரரு
மகேஷ் மோகனரரு மேல் சாந்தி மகேஷுக்கு அபிஷேகம் நடத்தி ஐயப்ப மூல
மந்திரத்தை காதில் சொல்லிக் கொடுத்து மூலஸ்தானத்திற்குள் அழைத்து
சென்றார். மாளிகைப்புறம் கோயில் முன்பு நடைபெற்ற சடங்கில் மேல்
சாந்தி முரளிக்கு அபிஷேகம் செய்து மூலஸ்தானத்திற்குள் அழைத்துச்
செல்லப்பட்டார்.
தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று
தரிசனம் நடத்தினர். வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.
இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
இன்று அதிகாலை 3:00 மணிக்கு
நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நெய் அபிஷேகத்தை
தொடங்கி வைப்பார். தொடர்ந்து கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள்
நடைபெறும்.
தினமும் காலையில் உஷபூஜை , மதியம் களபாபிசேகம்,
கலசாபிஷேகம் உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை தொடர்ந்து இரவு
9:00மணிக்கு அத்தாழ பூஜை முடிந்து 11:00 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை
அடைக்கப்படும். நேற்று சபரிமலையில் கனமழை பெய்தது பக்தர்கள்
நனைந்து கொண்டே வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
வசதிகள்
சபரிமலையில்
பக்தர்களுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக
தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறினார். தரிசனம் முடிந்து
செல்லும் பக்தர்கள் நிலக்கல் பஸ்ஸில் ஏறுவதற்காக பம்பை திருவேணி
சந்திப்பில் 60 மீட்டர் நீளத்தில் ெஷட் அமைக்கப்படும். பம்பை மணல்
பரப்பில் 45 மீட்டர் நீளத்தில் கூரை அமைக்கப்படும்.நிலக்கல், பம்பை,
சன்னிதானம், பாதைகளில்3000 கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
நிலக்கல்
பார்கிங் கிரவுண்டில் பாஸ்ட் டிராக் முறையில் பார்க்கிங் கட்டணம்
வசூலிக்கப்படும். நிலக்கல்லில் அனைத்து வாகனங்களும் ஸ்கேனிங் செய்த
பிறகு அனுப்பப்படும்.
இவர் அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.