நீண்ட காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வரவு செலவுத் திட்டம் – நிதி அமைச்சர்

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வரவு செலவு திட்டமாக இம்முறை அமைந்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ (15) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு செலவு திட்ட விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் உரையாற்றிய அமைச்சர் இது தேர்தல் வரவு செலவு திட்டம் அல்ல என்றும் வாக்கு பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை வாக்குகள் உள்ளன சிலர் சொல்கிறார்கள். இந்த வரவு செலவுத் திட்டம் கடந்த வருட வரவு செலவுத்தெட்டின் கார்பன் பிரதி என்று கூறுகிறார்கள். கடந்த வருடத்தின் கார்பன் பிரதியை தான் நாம் தயாரிக்க வேண்டும் அது ஓரளவு உண்மையாகும் கடந்த வருடத்தில் 70% காணப்பட்ட பணவீக்கம் 1 தசம் ஐந்து வீதம் வரை இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தின் காபன் பிரதி தான் அடிக்க வேண்டும். அது குறிப்பிட்டளவில் உண்மை தான். சென்ற வருடம் 70வீதமாகக் காணப்பட்ட பணவீக்கத்தை 1.5வீதம் வரை கொண்டுவந்த வரவு செலவுத் திட்டம் தவறானதா?. அதனால் அவ்வரவுசெலவுத் திட்டத்தில் பிரதி அடிப்பது தவறானதா? அரசியலில் நாம் சந்தர்ப்ப வாதியாக மாற வேண்டியதில்லை. பல்வேறு கருத்து வேறுபாடுகளைக் கொண்டவர்கள் பாராளுமன்றத்தில் உள்ளார்கள்.அது பாராளுமன்றத்தின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துதல் நமது பொறுப்பாகும்.

எமது அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே ஒன்றிணைந்து செயற்படுகிறோம். லிபியாவாக மாற்றமடையப் போன நாட்டைப் பாதுகாத்துள்ளோம் என மேலும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.