சபரிமலை:சபரிமலையில் நடப்பு மண்டல காலத்துக்கான ஏற்பாடுகள் தொடர்பாக சன்னிதானத்தில் தேவசம்போர்டு மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் கேரள அறநிலை துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
நடப்பு சீசனில் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. காட்டுப்பாதையில் பயமில்லாமல் பயணம் செய்ய வனத்துறையின் கூடுதல் ஊழியர்களும், யானை சிறப்பு படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவிக்காக அவசர சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
22 லட்சம் டின் அரவணை, மூன்று லட்சத்து 25 ஆயிரம் பாக்கெட் அப்பம் ஸ்டாக் உள்ளது. பிரசாதத்திற்கு தட்டுப்பாடு வராது. ஓட்டல்களில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் வசூலிக்கப்படுவதை உறுதி செய்ய ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சீசனில் ஏலக்காயில் விஷத்தன்மை உள்ளதாக எழுந்த புகாரின் பேரில் நீதிமன்றம் விற்க தடை விதித்த ஐந்து லட்சம் டின் அரவணையை எந்த விதத்தில் மாற்றுவது என்பது பற்றி பல்வேறு தனியார் நிறுவனங்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement