சென்னை: வெள்ளி முதல் வியாழன் வரை (17.11.2023 முதல் 23.11.2023 வரை) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன்? உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.
மேஷம்
கேது, புதன் நன்மைகளை வழங்குவர். திருச்செந்தூர் முருகனை வழிபட வளம் உண்டாகும்.
அசுவினி: கடந்த வார நெருக்கடி விலகும். ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் செயல்கள் யாவும் வெற்றியாகும். முயற்சி பலிக்கும். ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். வெளிநாட்டு தொடர்பால் நன்மை உண்டாக்கும்.
பரணி: ராசிநாதனும் சூரியனும் மறைவு பெறுவதால் அரசு வழி முயற்சியில் சில சங்கடம் உண்டாகும். வியாபாரத்தில் அதிக முயற்சி தேவை. திட்டமிட்டிருந்த பணி தள்ளிப்போகும். செலவிற்கேற்ற வருமானம் ஏற்படும். திரைத்துறையினருக்கு புதிய வாய்ப்பு வரும்.
கார்த்திகை 1ம் பாதம்: உங்கள் நட்சத்திர நாதனும் ராசி நாதனும் மறைவு பெற்றிருப்பதால் முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. அரசு வழி முயற்சியில் நெருக்கடி ஏற்பட்டாலும் அதை சமாளித்து நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். எதிர்ப்பு விலகும்.
ரிஷபம்
சுக்கிரன், ராகு நன்மைகளை வழங்குவர். நவக்கிரகத்தில் உள்ள சனி பகவானை சனி ஹோரையில் வழிபட சங்கடம் விலகும்.
கார்த்திகை 2,3,4: வாரத்தின் முதல் நாளில் செயல்களில் நெருக்கடி உண்டாகும். அதன்பின் தடைபட்ட பணி நடந்தேறும். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வெளிநாட்டிற்கு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சி பலன் தரும்.
ரோகிணி: தொழிலில் வேலை பளுவும், நட்பினால் ஆதாயமும் அதிகரிக்கும். பணியிடத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்தவற்றில் நன்மையான பலன் உண்டாகும். வெள்ளி அன்று புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
மிருகசீரிடம் 1,2: லாப ராகுவால் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறும். பொன் பொருள், வாகனச் சேர்க்கை உண்டாகும். எதிர்ப்பார்த்த தகவல் வரும். கலைஞர்கள் நிலை உயரும். திடமான சிந்தனையுடன் தைரியமாக செயல்படுவீர். வெள்ளி, சனிக்கிழமைகளில் உங்கள் செயல்களில் சங்கடம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்
16.11.2023 அதிகாலை 4:15 மணி – 18.11.2023 காலை 8:07 மணி
மிதுனம்
சூரியன், செவ்வாய் சுபிட்சத்தை வழங்குவர். சூரியனை வழிபட நன்மை அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 3, 4:வாரத்தின் முதல் நாளில் உங்கள் விருப்பம் நிறைவேறும். சனிக்கிழமை எதிர்பாராத நெருக்கடி தோன்றும். திங்கள் முதல் எதிர்பார்த்த உதவி வரும். அரசு வழி முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர்.
திருவாதிரை: ஆறாமிட சூரியனும் செவ்வாயும் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்கள். எதிர்ப்புகள் விலகும். வராமல் இருந்த பணம் வசூலாகும். உங்கள் முயற்சிக்கேற்ப லாபம் உண்டாகும். புதிய முயற்சியில் சாதகமான நிலை ஏற்படும். சனி, ஞாயிறில் செயல்களில் சங்கடம் தோன்றும்.
புனர்பூசம் 1,2,3: முயற்சிக்கேற்ப லாபம் உண்டாகும் வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு புதிய வேலை அமையும். அந்நியர்கள் வழியே ஆதாயம் அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். திங்கள் கிழமை அனைத்திலும் விழிப்புணர்வு அவசியம்.
சந்திராஷ்டமம்
18.11.2023 காலை 8:08 மணி – 20.11.2023 மதியம் 10:49 மணி
கடகம்
சுக்கிரன், கேது நன்மைகளை வழங்குவர். நவக்கிரகத்தில் உள்ள சனீஸ்வரருக்கு
வஸ்திரம் சார்த்தி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சனியின் தாக்கம் குறையும்.
புனர்பூசம் 4: நெருக்கடி விலகி உங்கள் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தை விரிவு செய்வீர். தொழிலில் இருந்த தடை விலகும். நிதி நிலை உயரும். ஒரு சிலர் புதிய சொத்து வாங்குவீர். திங்கள் அன்று செயல்களில் கவனம் அவசியம்.
பூசம்: சனி ஏழாமிடத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். உங்கள் சமயோசித செயல்பாடுகளால் புதிய முயற்சி பலிதமாகும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். வழக்கில் சாதக நிலை உண்டாகும். சங்கடம் நீங்கும். திங்கள், செவ்வாயில் விழிப்புணர்வு அவசியம்.
ஆயில்யம்: மூன்றாமிட கேதுவும் சுக்கிரனும் உங்கள் செயல்களை வெற்றியாக்குவர். செல்வாக்கை உயர்த்துவர். ஒரு சிலருக்கு புதிய வேலை அமையும். எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர். செவ்வாய் புதனில் அமைதி காப்பது நல்லது.
சந்திராஷ்டமம்
20.11.2023 மதியம் 10:50 மணி – 22.11.2023 மதியம் 1:11 மணி
சிம்மம்
சுக்கிரன், புதன், சனி நன்மைகளை வழங்குவர். விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட வாழ்க்கை வளமாகும்.
மகம்: தன ஸ்தானத்தில் நட்சத்திர நாதனுடன் ஜீவனாதிபதியும் இணைந்துள்ள நிலையில் உங்கள் எண்ணம் நிறைவேறும். நிதிநிலை உயரும். உங்கள் செயல் வெற்றியாகும். புதன் அன்று புதிய முயற்சிகளைத் தள்ளி வைப்பது நல்லது.
பூரம்: வாரத்தின் முற்பகுதியில் ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவீர். ஒரு சில செயல்களை யோசிக்காமல் செய்து அதில் லாபம் அடைவீர். உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். வியாழன் அன்று செயல்களில் சில சங்கடம் தோன்றும்.
உத்திரம் 1: ஆறாமிட சனியால் உங்கள் ஆரோக்கியம் சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். செயல்களில் லாபம் காண்பீர். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும்.
சந்திராஷ்டமம்
22.11.2023 மதியம் 1:12 மணி – 24.11.2023 மாலை 4:02 மணி
கன்னி
சுக்கிரன், சூரியன், செவ்வாய் நன்மைகளை வழங்குவர். நரசிம்மரை வழிபட நலம் கூடும்.
உத்திரம் 2,3,4: கடந்த வாரங்களில் உண்டான சங்கடம் விலகும். மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். ஜென்மசுக்கிரனால் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும்.
அஸ்தம்: ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் கேதுவால் மனதில் குழப்பம், டென்ஷன் ஏற்பட்டாலும், மூன்றாம் அதிபதி ஆட்சி பெறுவதால் துணிச்சலுடன் செயல்படுவீர். நினைத்ததை சாதித்துக் கொள்வீர். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.
சித்திரை 1,2: ஜென்மத்தில் கேது, ஏழில் ராகு சஞ்சரிப்பதால் அந்நியர்களால் லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். வாழ்க்கைத் துணையுடன் சங்கடம் ஏற்பட்டு விலகும். மூன்றாமிட சூரியனால் அரசு வழி முயற்சிகளில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செல்வாக்கு உயரும்.
துலாம்
புதன், ராகு, சுக்கிரன் நன்மையை வழங்குவர். துர்க்கையை வழிபட நன்மை அதிகரிக்கும்.
சித்திரை 3,4: வாக்கு ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதால் உங்கள் வார்த்தைகளில் தெளிவு இருக்கும். ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் ஆற்றல் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி முன்னேற்றம் அடையும். வழக்கு சாதகமாகும்.
சுவாதி: லாபாதிபதியும் தனாதிபதியும் இரண்டாமிடத்தில் சஞ்சரிப்பதால் பண வரவில் இருந்த தடை விலகும் செயல் வெற்றியாகும். விரயாதிபதி புதனும் இணைந்திருப்பதால் சாதுரியமாக செயல்பட்டு நன்மை அடைவீர்.
விசாகம் 1,2,3: புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவர். அவர்களிடம் எச்சரிக்கை அவசியம். கேதுவால் செலவு அதிகரிக்கும் என்றாலும் ராகுவால் எல்லாவற்றையும் சமாளிக்கும் திறமை உண்டாகும்.
விருச்சிகம்
சனி, கேது, சுக்கிரன், நன்மையை வழங்குவர். திருப்பரங்குன்றம் முருகனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
விசாகம் 4: உங்கள் ராசிநாதன் ராசிக்குள் சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கையும் துணிச்சலும் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். நினைத்தவற்றை சாதித்து முடிப்பீர்.
அனுஷம்: மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் முயற்சிகளில் இருந்த தடை விலகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர். உறவினர் ஆதரவு அதிகரிக்கும். தொழிலை விருத்தி செய்யும் முயற்சி நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.
கேட்டை: லாபஸ்தான கேது, சுக்கிரனால் உங்கள் வாழ்க்கையில் உண்டான சங்கடம் விலகும். எதிரி உங்களை விட்டு விலகிச் செல்லுவார். முயற்சிகளில் லாப நிலை உண்டாகும். வருமானம் பல வழிகளிலும் வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
தனுசு
சந்திரன் நன்மைகளை வழங்குவார். நவக்கிரக வழிபாடு நன்மை தரும்.
மூலம்: ராசிநாதன் வக்கிரம் அடைந்திருப்பதால் செயல்களில் இழுபறி உண்டாகும். எதிர்பாராத நெருக்கடி தோன்றும் என்றாலும் அதையெல்லாம் சமாளிக்கும் சக்தியும் உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பூராடம்: கடந்த வாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும். துணிச்சலுடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். ஒரு சிலர் புதிய முயற்சியில் ஈடுபடுவர். பணியாளர்கள் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
உத்திராடம் 1: விரய ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் புதன் சேர்க்கை பெற்றிருப்பதால் செயல்களில் நெருக்கடி தோன்றும். அரசு வழி முயற்சி இழுபறியாவதுடன் அபராதம் செலுத்தும் நிலையும் சிலருக்கு ஏற்படும். ராசி நாதன் வக்கிரம் அடைந்திருப்பதால் அனைத்திலும் நிதானம் தேவை.
மகரம்
ராகு, சுக்கிரன், சூரியன், செவ்வாய், புதன் நன்மைகளை வழங்குவர். சனிக்கிழமை அன்று அனுமனை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திராடம் 2,3,4: உங்கள் ராசிநாதன் ராசிக்குள்ளாகவே சஞ்சரித்தாலும் பெரும்பாலான கிரகம் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் செயல் வெற்றியாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். தடைப்பட்டிருந்த பணம் வரும். அரசு வழி முயற்சி ஆதாயமாகும்.
திருவோணம்: கடந்த வார சங்கடத்தில் இருந்து விடுபடுவீர். நீங்ஙள் மேற்கொள்ளும் முயற்சி ஒவ்வொன்றாய் நிறைவேறும். தொழிலில் உண்டான தடை விலகும். ஒரு சிலருக்கு சொத்து சேர்க்கை உண்டாகும்.
அவிட்டம் 1,2: மூன்றாமிட ராகு முன்னேற்றத்தை உண்டாக்குவார். லாப சூரியனும் செவ்வாயும் காவல் துறையினரின் செல்வாக்கை உயர்த்துவர். ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றமும் பொறுப்பும் ஏற்படும். ஹார்ட்வேர், எலெக்ட்ரானிக்ஸ், ஸ்டேஷனரி வணிகத்தில் லாபம் அதிகரிக்கும்.
கும்பம்
சுக்கிரன், புதன், சூரியன் நன்மைகளை வழங்குவர். வராகியை வழிபட சங்கடம் தீரும்.
அவிட்டம் 3,4: பத்தாமிட சூரியனால் முயற்சி வெற்றியாகும். நெருக்கடி விலகி நன்மைகளைக் காண்பீர். பிரச்னைகளை சமாளிக்கும் அளவிற்கு உங்கள் நிலை மாறும். அரசு விவகாரங்களில் ஏற்பட்ட தடை விலகும்.
சதயம்: கடந்த வாரம் வரை இருந்த சங்கடம் விலகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர். உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும். முயற்சி முன்னேற்றம் அடையும்.
பூரட்டாதி 1,2,3: சூரிய பகவான் கேந்திர பலம் பெறுவதால் முன்பிருந்த சங்கடம் நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி வரும். செல்வாக்கு உயரும்.
மீனம்
சனி பகவான் நன்மைகளை வழங்குவார். குலதெய்வத்தை வணங்கி வழிபட சங்கடம் விலகும்.
பூரட்டாதி 4: ராசி நாதன் வக்கிரம் அடைந்திருப்பதால் குடும்பத்தில் நெருக்கடி, உடல்நிலையில் சங்கடம் என்று தோன்றும். அலுவலக பணியாளர்களுக்கு வேலை அதிகரிக்கும் என்றாலும் லக்னாதிபதி ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் விருத்தியாகும். லாபம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: உங்கள் நட்சத்திர நாதன் சனி பகவான் பலம் பெற்று சஞ்சரிப்பதால் நெருக்கடி நீங்கும். உங்கள் வைராக்கியம் நிறைவேறும். ஏழாமிடத்தில் சுக்கிரனும் கேதுவும் இணைந்திருப்பதால் எதிர்பாலினரால் ஒரு சில பிரச்னை உருவாகும் என்பதால் எச்சரிக்கை தேவை.
ரேவதி: நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் கவனம் அவசியம். ராசி நாதன் குரு வக்கிரம் அடைந்திருப்பதால் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பணி புரியும் இடத்தில் சில நெருக்கடி தோன்றி மறையும். ஜென்ம ராகுவால் மனதில் தேவையற்ற ஆசை உருவாகும். பிறருக்கு மனச்சங்கடத்தை ஏற்படுத்தும் செயலை தவிர்ப்பீர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்