Mohamed Moois sworn in as the new President of the Maldives | மாலத்தீவின் புதிய அதிபராக முகமது மூயிஸ் பதவியேற்பு

மலே,மாலத்தீவின் புதிய அதிபராக முகமது மூயிஸ், 45, நேற்று பதவியேற்றார்.

தெற்காசிய நாடான மாலத்தீவுகளில் கடந்த செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில், அதிபராக இருந்த இப்ராஹிம் முகமது சோலிஹ் மற்றும் எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரசின் முகமது மூயிஸ் போட்டியிட்டனர்.

கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலில், யாருக்கும், 50 சதவீதத்துக்கு அதிகமான ஓட்டுகள் கிடைக்கவில்லை. இதையடுத்து சமீபத்தில் மீண்டும் தேர்தல் நடந்தது.

இதில், 53 சதவீத ஓட்டுகள் பெற்று மூயிஸ் வென்றதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, முகமது மூயிஸ் மாலத்தீவின் எட்டாவது அதிபராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு அந்நாட்டு தலைமை நீதிபதி முத்தசம் அத்னான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை அதிபராக ஹுசைன் முகமது லத்தீப் பதவியேற்றுக் கொண்டார்.

பதவியேற்பு விழாவில், முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் உட்பட தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். நம் நாட்டு சார்பில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு விழாவில் கலந்து கொண்டார்.

முன்னாள் அதிபர் இப்ராஹிம் சோலிஹ் இந்தியாவுடனான ஒத்துழைப்பை அதிகப்படுத்தியதுடன், அனைத்திலும் இந்தியாவுக்கு முன்னுரிமை என்னும் நோக்கில் செயல்பட்டார்.

தற்போது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முகமது மூயிஸ் சீன ஆதரவு நிலைப்பாடு உள்ளவர்.

பதவியேற்ற பின் மாலத்தீவு அதிபர் பேசுகையில், ”நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளிப்பேன்.

”மாலத்தீவில் எந்தவொரு வெளிநாட்டு ராணுவத்துக்கும் இடம் அளிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.