இம்பால், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், சைபால் பகுதியில் அசாம் ரைபிள் படையினர், தங்கள் வாகனத்தில் நேற்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென அந்த வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
குண்டு துளைக்காத வாகனம் என்பதால், அதில் இருந்த வீரர்களுக்கு காயம் ஏற்படவில்லை. தாக்குதல் நடத்திய திசை நோக்கி, பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு என்ன ஆனது என்பது குறித்து விபரங்களை வெளியிடாத நிலையில், அப்பகுதி முழுதும் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement