IND vs AUS Final Dream 11 Predictions: ஒருநாள் போட்டிகளுக்கான 13ஆவது ஐசிசி உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று முடிந்தன. இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற்ற இத்தொடரில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றன. இதில், இந்தியா நியூசிலாந்து அணியை வீழ்த்தியும், ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.
குஜராத் அகமதாபாத் நகரில் நடைபெறும் இறுதிப்போட்டியில் (ICC World Cup Final 2023) இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளை நாளை (நவ. 19) பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன, கடந்த 45 நாள்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த திருவிழாவில் மகுடம் சூடப்போவது எந்த அணி என்பது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்தியா 3ஆவது முறையாகவும், ஆஸ்திரேலியா 6ஆவது முறையாகவும் கோப்பையை கைப்பற்ற கடுமையாக போராடும், கடைசி வரை ஆட்டம் சுவாரஸ்யமாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், இரு அணிகளும் தங்களின் பிளேயிங் லெவனை (IND vs AUS Final Playing XI) மாற்றிக்கொள்ள வாய்ப்பு மிக மிக குறைவுதான். இந்திய அணியை (Team India) எடுத்துக்கொண்டால் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து பிரிவிலும் பலமாக இருந்தாலும் பந்துவீச்சில் ஆறாவது ஆப்ஷன் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, அந்த ஆறு பந்துவீச்சுக்காக சூர்யகுமாருக்கு பதில் அஸ்வினை பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், ரோஹித் சர்மா வெற்றிக் கூட்டணியை மாற்ற மாட்டார் என எதிர்பார்க்கலாம்.
மறுபுறம் ஆஸ்திரேலிய அணிக்கு (Australia Men’s Cricket Team) மிடில் ஆர்டரை சற்று பலவீனமாக சொல்லலாம். மார்ஷ் – ஸ்டீவ் ஸ்மித் – லபுஷேன் – மேக்ஸ்வெல் – இங்லிஸ் என மிடில் ஆர்டர் பார்ப்பதற்கு பலமாக காணப்பட்டாலும் ஸ்டீவ் ஸ்மித், லபுஷேன் ஆகியோர் பொறுமையாக விளையாடிக்கூடியவர். இருவரும் ஒரே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு பதில் கேம்ரூன் க்ரீன் அல்லது ஸ்டாய்னிஸ் மாற்று வீரராக வரலாம் என சிலர் கூறுகின்றனர். இதுவும் கடைசி ஆட்டநேரத்தில்தான் உறுதியாகும்.
அந்த வகையில், ஃபேன்டஸி கிரிக்கெட் அணியை அமைப்பதில் பலரும் ஆர்வமாக இருப்பார்கள். Dream 11 போன்ற செயலிகளிலும் பலரும் ஃபேன்டஸி அணியை அமைப்பார்கள். இதில் அவர்களுக்கான பரிந்துரையை இதில் காணலாம்.
பேட்டர்கள் – ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், டேவிட் வார்னர் (அ) ஹெட்
ஆல்ரவுண்டர்கள் – ஜடேஜா, மேக்ஸ்வெல்
விக்கெட் கீப்பர் – கே.எல். ராகுல்
பந்துவீச்சாளர்கள் – முகமது ஷமி, குல்தீப் யாதவ் (அ) பும்ரா, ஸ்டார்க், ஹேசில்வுட்