உங்கள் குழந்தைகள் மொபைலுக்கு அடிமையா… தடுப்பதற்கான வழிகள் என்ன?

Mobile Addiction Remedies: மும்பை நகரில் 16 வயது சிறுவன் தனது ஸ்மார்ட்போனை தந்தை வாங்கிக் கொண்டதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் மொபைல் அடிமைத்தனத்தை குறிக்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலகட்டத்தில் பரவலான பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றிய கவலையை இது எழுப்பி உள்ளது. மேலும், பெற்றொர்களாகிய நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களையும் இதில் காணலாம்.

கேமிங்கில் அடிமை 

முதலில் அந்த மும்பை சம்பவம் குறித்து விரிவாக காணலாம். அந்த சிறுவன் கேமிங்கில் அதிகப்படியான ஆர்வத்தை கொண்டதன் காரணமாக அவரது தந்தை தொலைபேசியைப் பறிமுதல் செய்துள்ளார். இதில் சோகமடைந்த சிறுவன் தற்கொலை செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சிறுவன், மைனர் என்பதால் யாருடைய அடையாளம் ரகசியமாக உள்ளது. அவர் இதற்கு முன்னும் மொபைல் இல்லாமல் மிகுந்த கவலையை வெளிப்படுத்தி உள்ளார். கடந்த 16ஆம் தேதி அந்த சிறுவன் அவரது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

(தற்கொலை எதற்கும் முடிவல்ல: தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்.)

தொடர்ந்து கேமிங்கில் ஈடுபட்டதால் கவலையடைந்த தந்தை, சிறுவனை தூங்கச் செல்லும்படி கூறி செல்போனை எடுத்து சென்றுள்ளார். நேற்றும் இதேபோன்ற சூழ்நிலையில் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட சிறுவன், நவம்பர் 17ஆம் தேதியே தற்கொலை மேற்கொண்டுள்ளார். அவனைக் காப்பாற்ற அவனது தந்தை முயன்றார். அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே இறந்துவிட்டான என தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீசார் இந்த வழக்கை தற்கொலை மரணம் என பதிவு செய்துள்ளனர், மேலும் இதயத்தை உலுக்கும் சம்பவம் குறித்து மேலும் விசாரிக்க பிரேத பரிசோதனை நடந்து வருகிறது.

உடல் செயல்பாடுகளை ஊக்குவியுங்கள்

மொபைல் போன் அடிமைத்தனத்தை நிவர்த்தி செய்வதற்கு, பெற்றோரின் வழிகாட்டுதல், மனநல ஆதரவு மற்றும் கல்வி உள்ளிட்ட பன்முக அணுகுமுறை தேவைப்படுகிறது. மொபைல் பயன்பாட்டில் நியாயமான வரம்புகளை அமைக்கவும், வெளிப்புற செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், தொழில்நுட்பத்தின் பொறுப்பான பயன்பாடு குறித்து வெளிப்படையான விவாதங்களில் ஈடுபடவும் பெற்றோர்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.

மொபைல் பயன்படுத்தும் நேரம் மற்றும் மொபைல் உபயோகத்திற்கான தெளிவான வழிகாட்டுதல்களை பெற்றோர்கள் உருவாக்க முடியும். உணவு, குடும்பத்துடன் செலவிடுதற்கான நேரம் மற்றும் உறங்கும் நேரம் போன்ற சாதனங்கள் தேவைப்படாத செயல்பாடுகளுக்கான குறிப்பிட்ட காலங்களை வரையறுக்கவும். பொறுப்பான பயன்பாட்டை மாதிரியாக்குவதன் மூலம் ஆரோக்கியமான மொபைல் பழக்கங்களை மேற்கொள்ளவும். பதின்ம வயதினர் பெற்றோர்கள் நேருக்கு நேர் பேசினால் மொபைல் அடிமைத்தனம் குறைய வாய்ப்புள்ளது. 

உடல் செயல்பாடுகள் மற்றும் வெளிப்புற முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும். சாதனம் இல்லாத விளையாட்டுகள், பொழுதுபோக்குகள் அல்லது சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பதை பெற்றோர்கள் ஊக்குவிக்கலாம்.

இதையும் நியாபகம் வச்சுக்கோங்க

செயலியின் பயன்பாடு மற்றும் திரை நேரத்தை நிர்வகிக்கவும் கண்காணிக்கவும் பெற்றோர் கட்டுப்பாட்டு அம்சங்களை (Parental Control) ஸ்மார்ட்போன்களில் செயல்படுத்தலாம். நிறுவப்பட்ட வரம்புகளைச் செயல்படுத்த இது பெற்றோருக்கு உதவும்.

அதிகப்படியான திரை நேரம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகளைப் பற்றி பெரியவர்கள் பதின்ம வயதினருக்கு தெரிவிக்கலாம். தூக்கமின்மை, கண் சோர்வு மற்றும் தனிப்பட்ட சமூக உறவுகளில் ஏற்படும் தாக்கம் போன்றவை குறித்து நிச்சயம் பேச வேண்டும். 

பதின்ம வயதினருடன் திறந்த மற்றும் வெளிப்படையான தகவல்தொடர்புகளை பராமரிக்கவும். அவர்களின் அனுபவங்கள், சவால்கள் மற்றும் தொலைபேசி பயன்பாடு தொடர்பான கவலைகளை தண்டனைக்கு பயப்படாமல் பகிர்ந்து கொள்ள அவர்களை ஊக்குவிக்கவும்.

பொறுப்புள்ள டிஜிட்டல் பயன்பாடு மற்றும் ஆன்லைன் செயல்பாடுகளின் சாத்தியமான விளைவுகள் பற்றி பதின்வயதினர்களுக்கு எப்போதும் கற்பிப்பது நல்லது. சமூக ஊடகங்களின் தாக்கம், சைபர்புல்லிங் மற்றும் ஆரோக்கியமான ஆன்லைன் இருப்பை பராமரிப்பதன் முக்கியத்துவம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வது இதில் அடங்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.