காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் : நானி திட்டவட்டம்

பாலிவுட்டில் பிரபல இயக்குனராக, தயாரிப்பாளராக வலம் வருபவர் கரண் ஜோஹர். இவர் நடத்தி வரும் காபி வித் கரண் என்கிற நிகழ்ச்சியில் அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் தவறாமல் கலந்து கொண்டு தங்களது படத்தை புரமோட் செய்வது வழக்கம். அந்த வகையில் தெலுங்கு நடிகர் நானியிடம் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு வந்தால் கலந்து கொள்வீர்களா என கேட்டதற்கு நிச்சயமாக இல்லை என பதிலளித்து அதிர்ச்சி அளித்துள்ளார்.

நானி நடித்துள்ள ஹாய் நான்னா திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார் நானி. அப்போது அவரிடம் காபி வித் கரண் நிகழ்ச்சி பற்றி கேட்கப்பட்ட போது தான் இப்படி ஒரு பதில் அளித்தார் நானி.

இது குறித்து அவர் கூறும்போது, “காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு என்னுடைய சொந்த விஷயங்களை குறித்து வெளிப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது என்னுடைய மதிப்பை உயர்த்தாது. அதேசமயம் கரண் ஜோஹரிடம் இருந்து அழைப்பு வந்தால் அவரிடம் தன்மையாக இதை சொல்வேன். அதே சமயம் நேரில் சென்று அவரை சந்தித்து பெர்சனலாக கலந்துரையாடுவேன்” என்றும் கூறியுள்ளார் நானி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.