ராஞ்சிஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி அருகே நேற்று முன் தினம் மர்ம நபர்கள் ஐந்து கோவில்களில் இருந்த சிலைகளை உடைத்து சேதப்படுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்.
ஜார்க்கண்டில் முதல்வர் ேஹமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள ராஞ்சி மாவட்டம், முத்மா கிராமத்தில் ஐந்து ஹிந்து கோவில்கள் உள்ளன.
நேற்று முன்தினம் இரவு இந்த கோவில்களுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த சிவன், ஹனுமன் மற்றும் அம்மன் சிலைகளை முற்றிலுமாக உடைத்து சேதப்படுத்தினர்.
இதனால் ஆத்திரம்அடைந்த கிராம மக்கள், ராஞ்சி தேசிய நெடுஞ்சாலையை நேற்று காலை முற்றுகையிட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த போலீசார், குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிப்பதாக உறுதியளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து, கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement