ஒட்டாவா,கனடாவில் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது, காலிஸ்தான் கொடியுடன் வந்த நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
வட அமெரிக்க நாடான கனடாவில் சீக்கியர்கள் உள்ளிட்ட இந்தியர்கள்ஏராளமானோர் வசிக்கின்றனர்.
பஞ்சாபை சேர்ந்த சீக்கியர்களின் ஒரு பிரிவினர், காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடு கோரி போராடி வருகின்றனர். இதற்கு ஆதரவாக கனடாவில் உள்ள சீக்கியர்கள் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 12ம் தேதி கனடாவின் பிராம்ப்டன் என்ற இடத்தில் இந்தியர்கள் சிலர் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த சிலர், அவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். கல்வீச்சில் ஈடுபட்ட குழுக்களை சேர்ந்தவர்கள் கைகளில் காலிஸ்தான் கொடியை ஏந்தி வந்தது தெரியவந்துள்ளது.
ஹிந்து வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, கனடா அரசுக்கு சமீபத்தில் இந்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், கனடாவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement