சென்னை: லியோவை தொடர்ந்து விஜய்யின் தளபதி 68 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்நிலையில், தளபதி 68 படத்தின் முதல் பாடலை அனிருத் பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து “மகராஜா நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா” என அனிருத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.