ரூ.13,430 கோடி மதிப்புள்ள டிவிஎஸ் குடும்ப நிறுவனம்… வழிநடத்தப் போகும் பெண் – யார் தெரியுமா?

இந்தியாவின் பழம்பெரும் நிறுவனங்களின் பட்டியலை எடுத்தால் அதில் டிவிஎஸ் குழுமத்தின் பெயர் இடம்பெறாமல் இருக்காது. மேட் இன் தமிழ்நாடு (made in tamilnadu) என்று சொல்லும் அளவுக்கு தமிழ்நாட்டில் உதயமாகி சர்வதேச அளவுக்குப் பிரபலமாகியிருக்கும் இந்நிறுவனம் இன்று உலகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இக்குழுமத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றுதான் சுந்தரம் கிளேட்டன் லிமிடெட் (எஸ்.சி.எல்-S.C.Ltd) நிறுவனம். இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.13,430 கோடியாக உள்ளது. பாரம்பரியமிக்க இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக லட்சுமி வேணு பொறுப்பேற்றுள்ளார்.

டிவிஎஸ் குடும்ப நிறுவனங்களில் உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ள இந்த லட்சுமி வேணு யார் என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது. அவர் வேறு யாருமில்லை டி.வி.எஸ் குழுமத்தை துவங்கிய டி.வி.சுந்தரம் அவர்களின் பேத்தியும். தற்போதைய டிவிஎஸ் மோட்டார் குழுமத்தின் தலைவரான வேணு சீனிவாசனின் மகள்தான் லட்சுமி வேணு. லட்சுமி வேணுவின் தாயாரும் முக்கிய தொழில் முனைவோர்தான்.

லட்சுமி வேணு

சென்னையில் பிறந்த லட்சுமி வேணு இங்கேயே பள்ளி படிப்பை முடித்தார். பின் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். தொடர்ந்து இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகத்திலும் பொறியியல் மேலாண்மையில் முனைவர் பட்டம் பெற்றார். படிப்பை முடித்து பிசினஸில் கால் பதிக்க நினைத்த இவருக்கு, சொந்த குடும்ப நிறுவனம் என்பதால் மட்டும் இப்பதவி வழங்கப்பட்டுவிடவில்லை‌.

முதலில் 2003-ல் சுந்தரம் காம்பொன்டென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பயிற்சியாளராக பணியமர்த்தப்பட்டார். வணிக உத்தி, கார்ப்பரேட் விவகாரங்கள், தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகிய துறைகளில் பணியாற்றி பயிற்சி பெற்றார்.

அமெரிக்காவில் டிவிஎஸ் குழுமத்தின் விற்பனைகளை பெருக்குவதற்கான யுக்திகள் வகுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். சுந்தரம் கிளேட்டன் லிமிடெட் நிறுவனத்தின் வர்த்தகத்தை உலக அளவில் விரிவடைய செய்வதிலும் இவர் முக்கிய நபராக இருந்தார். இவர் ஆற்றிய பணிகளை கௌரவிக்கும் விதமாக டிவிஎஸ் குழுமத்தின் துணை நிறுவனமான சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவி வழங்கப்பட்டுள்ளது‌.

லட்சுமி வேணு

அதுமட்டுமல்லாமல் டிவிஎஸ் குழுமத்தின் இயக்குனர்கள் குழுவிலும் இவர் உள்ளார். டாஃபே மோட்டார்ஸ் மற்றும் டிராக்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனராகவும் உள்ளார். இதன்மூலம் தொழிலதிபரான லட்சுமி வேணு இந்திய தொழில்துறையில் பெரும் புள்ளியாக உருவெடுத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.