வடக்கின் கடற்றொழிலுக்கு விசேட நிதி – சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்துவோம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

வடக்கின் கடற்றொழிலை மேலும் விருத்தி செய்கின்ற வகையில், வடக்கின் கடற்றொழில் தொடர்பிலான வசதிகளை மேற்கொள்வதற்கென 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், நீர் வேளாண்மைக்கனெ 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சரமான டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் தனது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

இந்த நிதியனைக் கொண்டு நாம் வடக்கின் கடற்றொழில் துறையினை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும், அதன் முகாமைத்துவத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கும் தேவையான திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உணவுப் பாதுகாப்பு, போசாக்கு உணவினை மேம்படுத்துவதற்கு, நன்னீர் வேளாண்மையினை அனைத்து நீர் நிலைகளையும் பயன்படுத்தி மேற்கொள்வதற்கும் தயாராக உள்ளோம். இவ்விடயங்கள் தொடர்பிலான விரிவான விளக்கங்களை கடற்றொழில் அமைச்சு தொடர்பிலான விவாத உரையின்போது தரலாம் என நினைக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.