பெங்களூரு : உடல் நலம் பாதிக்கப்பட்ட மூத்த நடிகை லீலாவதியை, நடிகர் அர்ஜுன் சந்தித்து நலம் விசாரித்தார்.
கன்னடத்தின் மூத்த நடிகை லீலாவதி, 87. வயது முதிர்வு காரணமாக, பெங்களூரு நெலமங்களாவில் உள்ள சோழதேவனஹள்ளி பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இவரை, தமிழ் திரைப்பட நடிகர் அர்ஜுன் நேற்று அவரை சந்தித்து பேசினார். ‘விரைவில் உடல் நலம் பெற, ஹனுமனை பிரார்த்திக்கிறேன்’ என அர்ஜுன் கூறினார்.
இதை கேட்ட, லீலாவதியின் மகன் வினோத் ராஜ் கதறி அழுதார். அவரை அர்ஜுன் சமாதானப்படுத்தினார்.
விலங்குகள் மீது பிரியம் கொண்ட லீலாவதியும், வினோத் ராஜும் அவர்கள் வீட்டின் அருகிலேயே, சொந்த செலவில் கால்நடை மருத்துவமனை கட்டி உள்ளனர். விரைவில் இந்த மருத்துவமனை திறக்கப்பட உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement