சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் 48வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. வாரயிறுதி எபிசோடில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றுள்ள நிலையில், அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த நிகழ்வுகளையொட்டி கமல் இந்த ப்ரமோக்களில் பேசியதையும் கேள்வி எழுப்பியதையும் பார்க்க முடிந்தது.