சென்னை: உலக கோப்பை 2023ஐ வெல்ல இந்தியாவும் ஆஸ்திரேலியா அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. ஆரம்பத்தில் ரோகித் சர்மா அதிரடி காட்டி ஆடினார். ஆனால், அவர் அவுட் ஆன நிலையில், அவருக்கு பின்னர் வந்த யாருமே அந்தளவுக்கு சிறப்பான ஆட்டத்தை விளையாடவில்லை.
