Sam Altman Microsoft: ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கிய நிறுவனம் Open AI. இந்நிறுவனம் கடந்த சனிக்கிழமை (நவ. 18) அன்று அதன் தலைமை செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேனை நிறுவனத்தில் இருந்து வெளியேற்றியது. மேலும், அவர் இந்த நிறுவனத்தை (OpenAI) சிறப்பாக வழிநடத்துவார் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதால் நிறுவனத்தின் நிர்வாகக் குழு இந்த நடவடிக்கை மேற்கொண்டது.
குழு வெளியிட்ட அறிக்கையில்,”OpenAI நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் சாமின் பல பங்களிப்புகளுக்கு நன்றி. அதே நேரத்தில், நாம் முன்னேறும்போது புதிய தலைமை அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்” என குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், முன்னாள் OpenAI நிறுவன சிஇஓ சாம் ஆல்ட்மேன் மற்றும் முன்னாள் OpenAI தலைவர் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோரை தங்களின் புதிய மேம்பட்ட AI ஆராய்ச்சி குழுவை வழிநடத்த மைக்ரோசாப்ட் பணியமர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் AI மேம்பாட்டிற்காக OpenAI நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.
மேலும், இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெல்லா அவரின் X பக்கத்தில்,”OpenAI உடனான எங்கள் பார்ட்னர்ஷிப்பில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் மற்றும் எங்கள் தயாரிப்பில் நடவடிக்கையில் நம்பிக்கை வைத்திருக்கிறோம், மைக்ரோசாஃப்ட் இக்னைட்டில் நாங்கள் அறிவித்த அனைத்தையும் தொடர்ந்து புதுமைப்படுத்துவதற்கான எங்கள் திறன் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களைத் தொடர்ந்து ஆதரிக்கிறோம். எம்மெட் ஷீர் மற்றும் OpenAI நிறுவனத்தின் புதிய தலைமைக் குழுவைப் பற்றி அறிந்து அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம்.
We remain committed to our partnership with OpenAI and have confidence in our product roadmap, our ability to continue to innovate with everything we announced at Microsoft Ignite, and in continuing to support our customers and partners. We look forward to getting to know Emmett…
— Satya Nadella (@satyanadella) November 20, 2023
மேலும், சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்து புதிய மேம்பட்ட AI ஆராய்ச்சிக் குழுவை வழிநடத்தப் போகிறார்கள் என்ற செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களின் வெற்றிக்குத் தேவையான வளங்களை வழங்குவதற்கு விரைவாகச் செல்ல நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என குறிப்பிட்டிருந்தார். சாம் ஆல்ட்மேனை நீக்கிய பின் OpenAI நிறுவனத்தின் புதிய இடைகால சிஇஓ-வாக எம்மெட் ஷீர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் twitch நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்தவர்.