அரசாங்கத்தினால் சீனிக்கான வரி அதிகரிப்பதற்கு முன்னர் இறக்குமதி செய்த 19,000 மெற்றிக் தொன் சீனி சந்தையில் காணப்படுவதாகவும் அதனால் சீனிக்கான தட்டுப்பாடொன்று ஏற்பட மாட்டாது, அதிகமான விலை விதிப்பு மேற்கொள்வதற்கான எத்தகைய அவசியமும் கிடையாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு அதிக விலையில் சீனி விற்பனை செய்யும் வியாபார நிலையங்களை சுற்றி வளைக்கும் நடவடிக்கைகளில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிர்ணய விலையில் சீனியை கொள்வனவு செய்தல் மற்றும் சீனி தொடர்பில் வீண் தட்டுப்பாட்டை ஏற்படுத்துதல் ஆகியவற்றை தடுக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு மட்டுமின்றி நாட்டு மக்களுக்கும் உரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான முறைகேடுகள் ஏற்படுமிடத்து, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு மக்கள் அறிவிக்க வேண்டியது அவர்களின் பொறுப்பு என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.