Toyota Innova Hycross Limited Edition: டொயோட்டா இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டொயோட்டா Rumion மாடல் காரை சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதில் 1.5 லிட்டர் எஞ்சின் உள்ளது. இதன் கட்டமைப்பு மாருதி சுசுகி எர்டிகாவை போல் இருப்பதாக கூறப்பட்டது. இந்த காரின் விலை 10.29 ரூபாய் லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
இந்த காரில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளேயை ஆதரிக்கிறது. ABD, Tow Alert மற்றும் Find My Car போன்ற அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருந்தன. இது மலிவு விலையில் 7 இருக்கைகள் கொண்ட காராக பார்க்கபட்டது.
அந்த வகையில், ஆட்டோ நிறுவனமான டொயோட்டா Innova Hycross மாடலின் லிமிடெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சிறப்பு பதிப்பில் வடிவமைப்பு சார்ந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரின் விலை அதன் அடிப்படை மாடலான GX வேரியண்டை விட 40 ஆயிரம் ரூபாய் அதிகம் என்பதை குறிப்பிட்ட வேண்டும்.
இந்த காரில் குரோம் முன்பக்க கிரில் உள்ளது, பின்புறம் கண்கவர் வெள்ளி நிற பம்பர் உள்ளது. இதனுடன், மல்டி பர்பஸ் வாகனமான (Multi-Purpose Vehicle) ஒரு சக்திவாய்ந்த இஞ்சினை கொண்டுள்ளது, இது நிறைய பெட்ரோலைச் சேமிக்கிறது. டொயோட்டா Innova Hycross சிறப்புப் பதிப்பின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.
விலை எவ்வளவு?
டொயோட்டா Innova Hycross சிறப்பு பதிப்பின் விலை ரூ.20.07 முதல் ரூ.20.22 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் விற்பனை டிசம்பரில் தொடங்கி கடைசி யூனிட் விற்பனை வரை தொடரும். கூடுதலாக, சிறப்பு பதிப்பை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான பல சலுகைகளும் கிடைக்கும்.
வடிவமைப்பு மாற்றங்கள்
டொயோட்டா Innova Hycross காரின் சிறப்பு பதிப்பின் வெளிப்புறம் தற்போதைய நிலையான மாடலைப் போலவே உள்ளது. இந்த MPV காரின் முன்புறத்தில் குரோம் கிரில் உள்ளது, இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. இதன் பின்புறம் ஃபாக்ஸ் சில்வர் ஸ்கிட் பிளேட் கொண்ட பம்பர் உள்ளது. இப்போது உட்புறத்திற்கு வரும்போது, மென்மையான டேஷ்போர்டைப் பெறுகிறது.
ஜன்னல் பொத்தான்களைச் சுற்றி மரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இருக்கை கவர்கள் துணியால் ஆனது மற்றும் இரட்டை நிற கருப்பு மற்றும் பழுப்பு நிற பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த மாடல் 7 மற்றும் 8 இருக்கை ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இஞ்சின்
டொயோட்டா Innova Hycross காரின் வரையறுக்கப்பட்ட பதிப்பில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை வழங்கியுள்ளது, இது அதிகபட்சமாக 172hp மற்றும் 205Nm டார்க்கை உருவாக்குகிறது. இதில் CVT கியர்பாக்ஸ் உள்ளது. எரிபொருளையும் மிச்சப்படுத்துவது இதன் இன்ஜினின் சிறப்பு.