கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த குழந்தை… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கர்நாடகா மாநிலம் கலபுராகி மாவட்டம், அப்சல்பூர் தாலுகாவில் உள்ள சீனமகேரா அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த நவம்பர் 16-ம் தேதி எப்போதும் போல மதிய உணவு தயாரிக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்துள்ளன. அப்போது அங்கு வந்த மகாந்தம்மா சிவப்பா தளவார் என்ற எட்டு வயது சிறுமி, எதிர்பாராத விதமாகத் தவறி கொதித்துக்கொண்டிருந்த சாம்பார் அண்டாவில் விழுந்துள்ளார்.

கொதிக்கும் சாம்பார்

இதனால் படுகாயமடைந்த அவரை மீட்ட சத்துணவுப் பணியாளர்கள் உடனடியாக சௌதாப்பூரில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் சிறுமி கலபுர்கியில் உள்ள குல்பர்கா மருத்துவ அறிவியல் கழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இருப்பினும் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால் கடந்த வெள்ளிக்கிழமையன்று பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பலகட்டங்களில், பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் பலனளிக்காததால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்குச் சிறுமி மகாந்தம்மா மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.

FIR

மகாந்தம்மாவின் தாயார் சங்கீதா சிவப்பா தளவார் அளித்த புகாரின் பேரில், சீனமகேரா அரசுப் பள்ளி சமையல் ஊழியர்கள், பள்ளித் தலைமையாசிரியை அக்ஷரா தசோஹா, உதவி இயக்குநர் அப்சல்பூர் என 7 பேர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.