வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 44 ரன்களில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆன இரண்டாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 25 பந்துகளில் 53 ரன்கள் அடித்தும், ருதுராஜ் கெய்க்வாட் 43 பந்துகளில் 58 ரன்கள் அடித்தும் அபார துவக்கம் அளித்தனர்.
இஷான் கிஷனும் அதிரடி ஆட்டம் ஆடி 32 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 10 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி 2 ஓவர்கள் இருந்த நிலையில் களத்துக்கு வந்த ரிங்கு சிங், 9 பந்துகளில் 31 ரன் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது.
236 ரன்கள் வெற்றி இலக்காகக்கொண்டு அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 191 ரன் மட்டுமே எடுத்து 44 ரன்களில் தோல்வியடைந்தது. இந்நிலையில் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2வது வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement