சில்க்யாரா சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்டு வெளியே கொண்டு வரப்படவுள்ள 41 தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் சின்யாலிசௌர் சமூக நல மையத்தில் நிறைவடைந்துள்ளன.

உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி அருகே, பிரம்மகால் – யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், சில்க்யாரா-தண்டல்கானை இணைக்கும் 4.5 கி.மீ தொலைவிலான சுரங்கப்பாதை கட்டுமானப் பணி, நவம்பர் 12-ம் தேதி அதிகாலை முன்பு வரை நடைபெற்றுக் கொண்டிருந்தது. திடீரென நவம்பர் 12-ம் தேதி அதிகாலை சுரங்கப்பாதையினுள் நிலச்சரிவு ஏற்பட்டு, விபத்து உண்டானது. மொத்தமாக 150 மீட்டர் தூரத்துக்கு மண் சரிந்திருக்க, கட்டுமானப் பணியிலிருந்த 41 தொழிலாளர்களும் சுரங்கப்பாதை இடிபாடுகளுக்கு அந்தப் பக்கம் சிக்கிக்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழு, உடனடியாக மீட்புப் பணியில் இறங்கியது. மொத்தமாக எட்டு அரசுத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் குழு, தொழிலாளர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவந்தது. சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்க பக்கவாட்டில் மொத்தம் 57 மீட்டர் தூரம்வரை துளையிட வேண்டும்.
ஒருபுறம் அதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுவர, மறுபுறம் ஆறு அங்குல குழாய் மூலம் தொழிலாளர்கள் சாப்பிடுவதற்கு உணவுகள், சுவாசிக்க ஆக்ஸிஜன் ஆகியவை தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தன. இடையில், குழாய் மூலம் அனுப்பப்பட்ட கேமராவில் தொழிலாளர்கள் பேசுவது படம் பிடிக்கப்பட்டு, அது வீடியோவாகவும் வெளியானது, கொஞ்சம் நிம்மதியை ஏற்படுத்தியது. தொடர்ந்து 11-வது நாளன்று மீட்புப் பணிகள்இறுதிக்கட்டத்தை எட்டியதாக செய்திகள் வெளியாகின.

துளையிடுவதற்கான இடம் கண்டறியப்பட்டதாகவும், அதற்காக சுரங்கத்தின் உச்சிக்குப் போடப்பட்ட சாலைப்பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டதாகவும், தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநர் அன்சூ மணீஷ் குல்கோ தெரிவித்திருந்தார். குறிப்பாக, 45 மீட்டர்வரை சுரங்கப்பாதைக்குள் துளையிட்டுவிட்டதாகவும், தொழிலாளர்களை அடைவதற்கு இன்னும் 12 மீட்டர் மட்டுமே துளையிட வேண்டும் என்றும் மகிழ்ச்சிகரமான செய்தியை அதிகாரிகள் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
பின்னர், எதிர்பாராத விதமாக துளையிடும் இயந்திரத்தில் (Auger) தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, துளையிடும் இயந்திரத்தை அகற்றும் பணியில் ஆட்கள் ஈடுபட வேண்டி இருந்ததால் மீட்பு பணியில் தடங்கல் ஏற்பட்டது. மீட்பு பணி முடிவடைய ஒருவாரம் ஆகும் என்று கூறப்பட்டது. இதில், பிளான் பி-ல் செங்குத்தாக துளையிடும் பணியும் கூடவே நடைபெற்றுவந்தது. இருப்பினும், 16-ம் நாளான நேற்று செங்குத்தாக துளையிடும் பணியில் நேற்று மதியம் வரை 36 மீட்டர்தோண்டப்பட்ட நிலையில் மீண்டும் தொய்வு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து, பக்கவாட்டில் துளையிடும் பணியில் டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த, `எலிவளை சுரங்கப் பணியாளர்கள்’ ஈடுபடுத்தப்பட்டனர். அதில் 17-வது நாளான இன்றுவரை 52 மீட்டர் தூரம் துளையிடப்பட்டிருக்கிறது. இன்னும், 5 முதல் 6 மீட்டர் தூரம் மட்டுமே இருப்பதாவும், இன்றைக்குள் அந்தப் பணிகள் முடிந்து சிக்கியிருக்கும் பணியாளர்கள் மீட்கப்படுவார்கள் மீட்புக் குழுவிடமிருந்து நம்பிக்கையான செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. உத்தரகாண்ட் முதல்வரும், இன்று மாலைக்குள் சிக்கியிருக்கும் பணியாளர்கள் மீட்கப்பட்டுவிடுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.
தற்போது அந்தப் பணிகள் திருத்தமாக நடைபெற்றுவருகின்றன. சுரங்கத்துக்கு வெளியே மருத்துவர்கள், செவிலியர்களுடன் ஆம்புலன்ஸுகளும் தயார்கள் நிலையில் இருக்கின்றன.
இப்படியான சூழலில், இன்று மதியம் இரண்டு மணியளவில், “மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மீட்புக் குழுவினரின் அயராத உழைப்பாலும், சுரங்கப்பாதையில் குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. விரைவில் அனைத்து தொழிலாளர் சகோதரர்களும் வெளியேற்றப்படுவார்கள்” என்று உத்தரகண்ட் முதல்வர் ட்வீட் செய்திருந்தார். அதன்படியே, அடுத்த மணிநேரத்தில் சுரங்கத்துக்குள் இருந்த சுரங்கபாணியாளர்கள் ஒவ்வொருவராக மீட்கும் பணி தொடங்கியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.