டில்லி நான்கு மாநில தேர்தல் முடிவுகள் தற்காலிக பின்னடைவு எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருத்து தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம் எனப் பலராலும் கருதப்படும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்க உள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக அதிக […]