வடோதரா குஜராத் முதல்வர் அலுவலக அதிகாரி போல் நடித்து, பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் தப்பியோடிய நிலையில் மூன்று வாரங்களுக்கு பின் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.
குஜராத்தின் ஆமதாபாதைச் சேர்ந்த வீரஜ் படேல் என்பவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்.
இவர், குஜராத் முதல்வர் அலுவலக அதிகாரி போல் நடித்து, ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தார்.
இந்த வழக்கில் அந்த மாநில போலீசாரால் கடந்த ஏப்ரலில் படேல் கைது செய்யப்பட்டார்.
வதோதரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக, கடந்த நவ. 10ல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, போலீசார் கண்களில் மண்ணை துாவிவிட்டு, அங்கிருந்து படேல் தப்பிச் சென்றார். இதையடுத்து, இவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
கண்காணிப்பு கேமரா உட்பட பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, 7,000 கி.மீ., வரை பயணித்த போலீசார், படேலை வடகிழக்கு மாநிலங்களான அசாம் – மிசோரம் எல்லையில் நேற்று கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘குஜராத்தில் இருந்து தப்பிய படேல், சத்தீஸ்கர், பீஹார், அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பதுங்கியிருந்தார்.
‘சர்வதேச எல்லை வழியாக தப்பிச் செல்ல தயாரான இவரை, தீவிர தேடுதலுக்குப் பின் அசாம் – மிசோரம் எல்லையில் கைது செய்தோம்’ என கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்