Hyundai Creta facelift – 2024 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுக விபரம் வெளியானது

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், புதிய கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி மாடலை ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. 160hp பவரை வழங்கும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை பெற உள்ளது.

மற்றபடி, தொடர்ந்து 115 hp பவரை வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இருவிதமான ஆப்ஷனுடன் மொத்தமாக மூன்று என்ஜின் விருப்பங்களை பெற உள்ளது.

2024 Hyundai Creta Facelift

புதிய கிரெட்டா எஸ்யூவி மாடலின் தோற்ற அமைப்பில் முற்றிலும் மேம்பட்ட முகப்பு அமைப்பானது பேலிசைட் பிரீமியம் எஸ்யூவி மற்றும் சான்டா ஃபீ கார்களின் உள்ள நவீனத்துவமான ஹூண்டாய் வடிவத்தை பெற்று புதிய H வடிவ எல்இடி ரன்னிங் விளக்குடன் புதிய புராஜெக்டர் எல்இடி ஹெட்லைட் பெற வாய்ப்புகள் உள்ளது.

பகவ்வாட்டில் புதுப்பிக்கப்பட்ட அலாய் வீல் பெற்று பின்புறத்திலும் பம்பர் மற்றும் டெயில் லைட் மாற்றியமைக்கபட்டிருக்கலாம்.

இன்டிரியரில் புதுப்பிக்கப்பட்ட நிறத்தை பெற உள்ள டேஸ்போர்டில் சிறிய அளவிலான ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறக்கூடும். மேம்பட்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோமேட்டிக் ஏசி கண்ட்ரோல் ஆகியவற்றை பெற உள்ளது.

வாகனத்தின் நிலைப்பு தன்மை கண்டரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் ஆகியவற்றுடன் அடிப்படையான 6 ஏர்பேக்குகள் பெற உள்ள 2024 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரில் ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெறுவது உறுதியாகியுள்ளது.

கிரெட்டா காரில் 115 hp பவர் மற்றும் 143.8 Nm டார்க் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 116 hp பவர் மற்றும் 250 Nm டார்க் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜிடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரு என்ஜினிலும் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்க உள்ளது.

கூடுதலாக, 1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

2024 ஹூண்டாய் கிரெட்டா காருக்கு கடும் சவாலினை வழங்கும் மாடல்களாக மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஹோண்டா எலிவேட், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், கியா செல்டோஸ், எம்ஜி ஆஸ்டர், டாடா ஹாரியர் மற்றும் கியா செல்டோஸ் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

2024 ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி ஜனவரி 16 ஆம் தேதி ரூ.11  லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். கூடுதலாக கிரெட்டா எலக்ட்ரிக் மாடல் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரக்கூடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.