A man who was absconding for 26 years was arrested in a theft case | திருட்டு வழக்கில் 26 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

பெங்களூரு : திருட்டு வழக்கில் 26 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

ஹாசன் மாவட்டம் ஆலுாரை சேர்ந்தவர் தேவகவுடா, 50. பெங்களூரில், 1997 ல் திருட்டு வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்றவர், ஜாமினில் வெளிவந்தார். அதன் பின், விசாரணைக்கு ஆஜராக, பலமுறை நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆஜராகாமல் தலைமறைவானார்.

அவரை ஹூப்பள்ளி, பெங்களூரு உட்பட பல இடங்களில் போலீசார் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட நபர், பெங்களூரு காமாட்சி பாளையா பகுதியில் ஹோட்டல் ஒன்றில் சமையல்காரராக பணியாற்றுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.