சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகிவரும் படம் எஸ்கே 21. இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள நிலையில், தன்னுடைய உடலை மிக அதிகமான பிட்னசுடன் அவர் பராமரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் -சாய் பல்லவி கணவன் -மனைவியாக நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
