திரைப்பட எழுத்தாளர் வேலுமணி காலமானார்

திரைப்படம் தொடர்பான பல புத்தகங்கள் எழுதியவரும் வசனகர்த்தாவுமான வேலுமணி காலமானார். விஜயகாந்தின் நெருக்கமான நண்பரான அவர் தேவன், எங்கள் ஆசான், விருதகிரி படங்களுக்கு வசனம் எழுதினார். 30 ஆண்டு திரை அனுபவம் கொண்ட வேலுமணி, இயக்குநர் வஸந்தின் 'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'ரிதம்' உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.

55 வயதான வேலுமணி பல்வேறு உடல்நல பிரச்சினையால் பாதிக்கப்பட்டு கடலூரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். வேலுமணி திருமணம் செய்து கொள்ளவில்லை. தம்பியும், தங்கையும் அவரை கவனித்து வந்தனர்.

விஜயகாந்த்தின் மீது மிகுந்த அன்பு கொண்ட வேலுமணி அவரது உடல்நிலை குறித்தும் மிகுந்த கவலையில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.