Flipkart Big Year End Sale 2023: ஸ்மார்ட்போன்களுக்கு அதிரிபுதிரி ஆஃபர் – அட்டகாசமான டீல்

பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல்: ஃபிளிப்கார்ட் தனது இகாமர்ஸ் தளத்தில் பிக் இயர் எண்ட் விற்பனையை அறிவித்துள்ளது. இது டிசம்பர் 9 முதல் தொடங்கி டிசம்பர் 16 வரை தொடரும். ஆனால், Flipkart Plus மெம்பர்ஷிப் உள்ளவர்கள் ஒரு நாள் முன்னதாக அதாவது இன்றிலிருந்தே ஒப்பந்தங்களை அணுகலாம். விற்பனைக்கு முன்னதாக, ஈ-காமர்ஸ் தளம் விற்பனையின் போது கிடைக்கும் சில சலுகைகள் குறித்த விவரங்களை பகிர்ந்துள்ளது.

பிளிப்கார்ட் பிக் இயர் எண்ட் சேல் நாளை முதல்

இந்த விற்பனையின்போது பிளிப்கார்டில், iPhone 14, Nothing Phone (2), Pixel 7, Moto G54 5G, Realme C53, Samsung Galaxy F14 5G, Poco M6 Pro 5G, Motorola Edge 40 Neo, Samsung Galaxy S21 FE 5G (2023), Vivo Tle2 போன்ற பிரபலமான ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் கிடைக்கும். கூடுதலாக, சாம்சங் கேலக்ஸி எஸ்22 ரூ. 40,000 க்கு கீழ் இருக்கும் என்று பிளிப்கார்ட் வெளியிட்டுள்ள டீஸர் மூலம் தெரியவந்துள்ளது. சாம்சங் ஃபிளாக்ஷிப் போன் தற்போது ரூ.49,999க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது விற்பனையின்போது வாடிக்கையாளர்களுக்கு பெரிய தள்ளுபடி கிடைக்கும். இந்த ஆண்டு சாம்சங் கேலக்ஸி எஸ் 23 தொடரில் ஒப்பந்த சலுகைகளை வழங்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

நேரலையில் அதிரடி ஆஃபருடன் விற்பனை

ஒவ்வொரு முறையும் போலவே, இந்த முறையும் பிளிப்கார்ட் இ-காமர்ஸ் நிறுவனம் பல்வேறு தயாரிப்புகளுக்கு தள்ளுபடிகளை வழங்கும் பிரத்யேக வலைப்பக்கத்தை உருவாக்கியுள்ளது. இதில் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் மற்றும் சில பொருட்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. விற்பனையின் போது, ​​ஆப்பிள், சாம்சங், ரியல்மி மற்றும் மோட்டோரோலா போன்ற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களில் இதுவரை இல்லாத விலைக் குறைப்பு இருக்கும்.

எந்ததெந்த போன்களில் தள்ளுபடி

வழக்கம் போல் iPhone 14, 55,000 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும். மோட்டோரோலாவின் எட்ஜ் 40ஐ ரூ.25,499க்கு வாங்கலாம். Infinix Hot 30i ரூ.7,149க்கு கிடைக்கும். Nothing Phone 2 -ன் ஆரம்ப விலை ரூ.34,999 -லிருந்து தொடங்கும். இந்த விலைக் குறைப்பில் வங்கிச் சலுகைகளும் அடங்கும் என்பதை வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். Samsung Galaxy S22-க்கான விலைக் குறைப்பும் இருக்கும். கூகுள் பிக்சல் 7, Realme C53, Samsung Galaxy F14 5G, Poco C55 மற்றும் Realme 11 Pro 5G போன்ற ஸ்மார்ட்போன்களும் அதிரடி விலை குறைப்புகளுடன் விற்பனைக்கு வரும்.

10% வரை தள்ளுபடி கிடைக்கும்

எச்டிஎஃப்சி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடியை Flipkart வழங்கும். இது தவிர, நோ-காஸ்ட் EMI விருப்பம் மற்றும் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியும் கிடைக்கும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.