புதுடில்லி:தலைநகர் டில்லியில் நேற்று கடும் பனிமூட்டம் மற்றும் கடுங்குளிர் நிலவியது.மாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.2 டிகிரி செல்ஷியஸாக பதிவாகி இருந்தது. இது இந்த பருவத்தில் இதுவரை இல்லாத மிகவும் குறைந்தபட்ச வெப்பநிலை என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதேபோல, காலை 9:00 மணிக்கு மாசு அதிகரித்து காற்றின் தரக்குறியீடு 358 ஆக இருந்தது. இது, மிகவும் மோசமான நிலை என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காலை 8:30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 100 சதவீதமாக இருந்தது.
தேசிய தலைநகர் பிராந்தியத்தில், கடந்த இரண்டு நாட்களாக இயல்பை விட குறைவான வெப்பநிலையே பதிவாகி உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை நேற்று முன் தினம், 7.4, அதற்கு முதல்நாளான 12ம் தேதி, 6.8, 11ம் தேதி 6.5 டிகிரி செல்ஷியஸாக பதிவாகியிருந்தது.
கடுங்குளிர் துவங்கி விட்டதால், டில்லிவாசிகள் புதிய கம்பளி, ஸ்வெட்டர் உள்ளிட்டவற்றை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement