அயோத்தியில் ராமர் கோயில் – பாபர் மசூதி தொடர்பான வழக்கின் தீர்ப்பை 2019-ம் ஆண்டு அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அளித்தது. அதில், அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து ராமர் கோயில் கட்டுமானப் பணிகள், விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.

ஜனவரி மாதம் 22-ம் தேதி மதியம் 12:45 மணிக்குள் ராமர் கோயிலின் கருவறையில் குழந்தை ராமர் சிலையைப் பிரதிஷ்டை செய்வதற்கான பணிகளை, ஸ்ரீ ராம ஜென்ம பூமி ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான பூஜைகள் அடுத்த மாதம் 16-ம் தேதி தொடங்குகின்றன. இந்த விழாவுக்காக அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த 4,000 துறவிகளுக்கு ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளை அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை, உள்ளூர் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.
இந்த நிலையில், ராம் மந்திர் அறக்கட்டளை செயலர் சம்பத் ராய் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “ராமர் கோயிலின் கருவறை தயாராக இருக்கிறது. குழந்தை ராமர் சிலையும் தயாராக இருக்கிறது. ஆனால் கோயில் முழுவதும் இன்னும் முழுமையாக கட்டுமானப்பணிகள் முடியவில்லை. இந்த முழுப்பணியும் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகலாம். இன்னும் கோயிலில் நிறைய வேலைகள் உள்ளன.

எனவே, ஏராளமான மக்கள் இன்னும் கட்டுமானப் பணி முழுமைப்பெறாத கோயிலுக்கு வந்தால் நகரத்தில் கூட்ட நெரிசல் ஏற்படும். எனவே, நெரிசலைத் தவிர்க்க, ஜனவரி 22-ம் தேதி அயோத்திக்கு வருவதற்குப் பதிலாக அருகிலுள்ள கோயிலில் ‘ஆனந்த் மஹோத்சவ்’ கொண்டாடுமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். அது எந்தக் கோயிலாக இருந்தாலும் சரிதான்” என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.