வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ” பெண்கள் தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொள்ளாமல், மற்றவர்களுக்கும் உதவுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக எங்கள் அரசு அயராது உழைக்கிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்திரையை பிரதமர் மோடி ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் துவக்கி வைத்தார்.
பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: ஒரே மாதத்தில் விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்திரை ஆயிரக்கணக்கான கிராமங்கள் மற்றும் 1,500 நகரங்களை சென்றடைந்துள்ளது. வளர்ந்த இந்தியா என்ற உறுதியுடன், ‘மோடியின் உத்தரவாத வாகனம்’ நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைகிறது.
பெண்கள் தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொள்ளாமல், மற்றவர்களுக்கும் உதவுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக எங்கள் அரசு அயராது உழைக்கிறது. இந்த யாத்திரையை ஊக்குவிக்குமாறு மாநில அரசுகளை நான் கேட்டுக்கொள்கிறேன். யாரும் பின் தங்கி விடக்கூடாது என்பதில் பா.ஜ., அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது. இந்த யாத்திரை 140 கோடி மக்களின் நலனுக்கானது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement