வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பார்லிமென்டின் கண்ணியத்தை காக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும் என எம்.பி.,க்களுக்கு லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் ஓம் பிர்லா கூறியிருப்பதாவது: பார்லிமென்டின் கண்ணியத்தை காக்கவே எம்.பி.,க்கள் சிலரை சஸ்பெண்ட் செய்தேன். எதிர்காலத்தில் இதுபோன்ற சூழல் ஏற்படக்கூடாது. எம். பி.,க்கள் சஸ்பெண்ட் நடவடிக்கை எனக்கு ஆழ்ந்த மனவேதனையை ஏற்படுத்தியது. எம்.பி.,க்கள் அனைவரும் தேசத்திற்காக தங்களது கடமைகளை உண்மையாக செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
பார்லிமென்டின் கண்ணியத்தை காக்க எம்.பி., க்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். புகைக்குப்பி வீசப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கை லோக்சபாவில் பகிரப்படும். இந்த சம்பவம் துரதிஷ்டவசமானது என்பதால் தான் எனது கவலையை அன்றே லோக்சபாவில் வெளிப்படுத்தினேன்.
அன்றே அனைத்து கட்சி எம்.பி.,க்களுடன் கலந்துரையாடினேன். சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு விசாரணையை துவக்கி உள்ளது. விரைவில் அறிக்கை பகிரப்படும். இவ்வாறு கடிதத்தில் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement