வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று பிஜு ஜனதா தளம் கட்சியில் சேர்ந்துள்ள வி.கே.பாண்டியன், தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன் (வி.கே.பாண்டியன்) 2000ம் பேட்சை சேர்ந்த ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார். அங்கு பல்வேறு மாவட்ட கலெக்டராகவும், பல துறைகளின் செயலாளராகவும் பணியாற்றி உள்ளார்.
2011 முதல் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக பணியாற்றி அவரது வலதுகரமாக செயலாற்றினார்.
அம்மாநிலத்தை ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவரான நவீன் பட்நாயக்குக்கு அடுத்த இடத்தில் செல்வாக்குடன் வலம் வந்தார். வி.கே பாண்டியன் விருப்ப ஓய்வு பெற்ற பின், நவம்பர் 27ம் தேதி பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். இந்நிலையில் வி.கே.பாண்டியன், வரும் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement