
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ராட்சச ராஜாவுக்காக இணைந்த ராணா – தேஜா
பாகுபலி படத்திற்குப் பிறகு பிரபலமான நடிகர் ராணா முழு நேர ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் ஹீரோ, வில்லன் மற்றும் வெப் சீரிஸ் என கிடைக்கும் வாய்ப்புகளில் தொடர்ந்து பயணித்து வருகிறார். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது புதிய படமான ராட்சச ராஜா என்கிற படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் தேஜா இயக்க உள்ளார்.
கடந்த 2017ல் ராணா நடித்த நேனே ராஜா நேனே மந்திரி என்கிற படத்தை இயக்கிய தேஜா அந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் ராணாவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
இதற்கு முன்னதாக தேஜா இயக்கத்தில் அஹிம்சா திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. ராணாவின் தம்பியான அபிராம் டகுபதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி தேஜா இந்த படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.