Shruti Haasan: "எட்டு ஆண்டுகள் மதுவுக்கு அடிமையாக இருந்தேன்!" – மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன்.

இவர், பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் நடிப்பில் டிசம்பர் 22-ம் தேதி பல மொழிகளில் வெளியாகவுள்ள ‘சலார்’ படத்தில் கதநாயகியாக நடித்துள்ளார். இதையடுத்து ஹாலிவுட்டிலும் ‘The Eye’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஸ்ருதி ஹாசன், தான் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்து மீண்டு வந்ததாக மனம் திறந்து பேசியுள்ளார்.

Shruti Haasan | ஸ்ருதி ஹாசன்

இது குறித்து பேசிய அவர், “என் வாழ்நாளில் எட்டு ஆண்டுகள் மதுவுக்கு அடிமையாக இருந்தேன். அந்த நாள்களில் பார்ட்டிகளில் நிதானமாக இருப்பது எனக்கு மிகவும் கடினமாக இருக்கும். நண்பர்களுடன் குடிப்பதை விரும்புவேன். ஆனால் போதைப்பொருளை ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை. அந்த நாள்களில் மது என் வாழ்க்கையை ஆட்டிப்படைத்திருந்தது. பின்னர் அதிலிருந்து மீண்டுவிட்டேன். இப்போது அதுபற்றி நான் வருத்தப்படவில்லை. அது என் வாழ்க்கையின் ஒரு கட்டம். பலரும் இதைக் கடந்து அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்” என்று தனது கடந்த கால கசப்புகள் குறித்து வெளிப்படையாகப் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.