சென்னை: கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் – மீட்பு பணிக்கு வருமாறு தொண்டர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள், உடனடியாகக் களத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் […]
