தரைப்படையில் 3 ஹீரோக்கள்

ஸ்டோனக்ஸ் நிறுவனத்தின் சார்பில் வேல்முருகன் தயாரித்துள்ள படம் 'தரைப்படை'. ராம் பிரபா இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜீவா, பிரஜின், விஜய் விஷ்வா என்று மூன்று நாயகர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்கள் ஜோடியாக 3 புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் ராம் பிரபா கூறியதாவது: ஒரு படத்தின் கதை தொடங்கியவுடன் அந்த படத்தின் கதாநாயகன் யார் வில்லன் யார் என்று தெரிந்துவிடும். அப்படி வழக்கமான அதே வார்ப்பில் தான் எல்லா திரைப்படக் கதைகளும் அமைக்கப்படுகின்றன. படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் இவர் ஹீரோ, இவர் வில்லன் என்று படம் தொடங்கிய சில காட்சிகளிலேயே தெரிந்துவிடும். ஆனால் ஒரு கதையில் யார் கதாநாயகன் யார் வில்லன் என்று தெரியாத வகையில் அந்தந்த கதாபாத்திரத்தின் கறுப்பு வெள்ளைப் பக்கங்களைப் புரட்டிக் காட்டும் படம்.

இது ஒரு கேங்ஸ்டர் சம்பந்தமான கதை. மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் சங்கிலித் தொடர் சந்தைப்படுத்துதல் மூலம் ஒரு மோசடிக் கும்பல் மக்கள் பணத்தை அபகரிக்கிறது. அந்தக் கும்பலிடமிருந்து கேங்ஸ்டர் கும்பல் அந்தப் பணத்தைக் கைப்பற்றுகிறது. இப்படி அந்தப் பணம் மாறி மாறி மனிதர்களிடம் போய்க் கொண்டிருக்கிறது. இறுதியில் எங்கே செல்லும் என்று சொல்ல முடியாத அளவிற்குப் எப்படி பயணம் செய்கிறது என்பதை சொல்லும் படம் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.