Electric Cars In 2024: இந்தியாவில் மின்சார வாகனங்கள் சந்தை வேகமாக விரிவடைந்து வருகின்றன. இந்த வரிசையில், வரும் 12 மாதங்களில் பல புதிய எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. சில கார் உற்பத்தியாளர்கள் 2024 ஆம் ஆண்டில் புதிய மின்சார மாடல்களை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சில நிறுவனங்கள் அடுத்த ஆண்டுக்கான திட்டங்களில் மின்சார கார் உற்பத்தியில் வேலை செய்கின்றன.
இந்த எலெக்ட்ரிக் கார்கள் நாட்டில் வாகனங்களைத் தயாரிக்கும் பெரிய நிறுவனங்களிடமிருந்து வரும். தற்போது இந்திய வாகன சந்தையில் மின்சார வாகனங்களின் பங்கு 7%க்கும் குறைவாகவே உள்ளது. இதை அதிகரிக்க, சில நிறுவனங்கள் மலிவான மின்சார கார்களையும் அறிமுகப்படுத்த திட்டமிடுகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்குப் போட்டியாக எந்தெந்த எலக்ட்ரிக் கார்களை அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் சில கார்களின் பட்டியலை பார்க்கலாம்.
மாருதி சுஸுகி eVX
மாருதி சுஸுகி தனது முதல் எலக்ட்ரிக் காரை அடுத்த ஆண்டு அதாவது 2024-ல் அறிமுகம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் மின்சார கார் Maruti Suzuki eVX ஆகும். இது ஜனவரி 2023-ல், 2023 ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து குஜராத்தில் உள்ள தங்களது தொழிற்சாலையில் இந்த எலக்ட்ரிக் கார் உற்பத்தியைத் தொடங்கும். தகவலின்படி, Maruti Suzuki eVX ஆனது 60 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்குடன் பொருத்தப்பட்டிருக்கும். அதே நேரத்தில் இது 550 கிலோமீட்டர் ஓட்டும் வரம்பைக் கொண்டிருக்கும்.
டாடா ஹாரியர் EV
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹாரியர் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் பதிப்பை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. 2023 ஆட்டோ எக்ஸ்போவில் ஹாரியர் எலக்ட்ரிக் (Tata Harrier EV) எஸ்யூவியை வெளியிட்டது. ஹாரியர் EV இரண்டாம் தலைமுறை மின்சார வாகன கட்டமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. V2L சார்ஜ் செய்யும் திறனைக் கொண்டிருக்கும். ஹாரியர் EV 2024-ல் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இது சாலைகளில் சோதனையின் போது காணப்பட்டது.
டாடா பஞ்ச் EV
பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மாடல்களில் டாடா பன்ச் அறிமுகப்படுத்திய பிறகு, இப்போது அதை எலக்ட்ரிக் பதிப்பிலும் அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பஞ்ச் EV (Tata Punch EV) ஆனது நாட்டிலேயே மிகவும் மலிவான மின்சார SUV ஆக இருக்கலாம். நிறுவனம் ஏற்கனவே டியாகோ மற்றும் டிகோரை பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் பதிப்புகளில் விற்பனை செய்து வருகிறது. Tata Punch EV, Nexon EV கார்கள் Ziptron தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. பஞ்ச் EV ஆனது 300 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒருமுறை சார்ஜ் செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா கர்வேவ் EV
2024 -ல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கர்வ் EV (Tata Curvev EV) மின்சார கார் பிரிவில் டாடா மோட்டார்ஸின் மூன்றாவது மாடலாக இருக்கும். டாடா கர்வ் முதலில் பெட்ரோல், டீசல் மாடலில் அறிமுகப்படுத்தப்படும். அதன் பிறகு நிறுவனம் அதன் மின்சார பதிப்பை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸின் X1 பிளாட்ஃபார்மில் கட்டப்பட்ட கர்வ் EV ஆனது, மின்சார காராக அறிமுகப்படுத்தும்போது அதன் அமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது.
கியா EV9
கொரிய வாகன நிறுவனம் தனது 7 இருக்கைகள் கொண்ட எலக்ட்ரிக் எஸ்யூவியான Kia EV9 ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. எலக்ட்ரிக் குளோபல் மாடுலர் பிளாட்ஃபார்ம் (இ-ஜிஎம்பி) அடிப்படையில், இந்த எலக்ட்ரிக் எஸ்யூவியின் நீளம் ஐந்து மீட்டருக்கும் அதிகமாக இருக்கும். மேலும் இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 541 கிலோமீட்டர் வரை செல்லும். EV9 இரண்டு வகைகளில் கொண்டு வரப்படலாம். உலகளவில், EV9 ஆனது 150 kW மின்சார மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 9.4 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும்.