புதுடில்லி:கல்லுாரி ஆசிரியர் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, டில்லி நஜாப்கரில் உள்ள சவுத்ரி பிரம்ம பிரகாஷ் ஆயுர்வேத் சரக் சன்ஸ்தான் முன்னாள் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் மீது, ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் ஊழல் தடுப்புப் பிரிவு இணை கமிஷனர் மதுர் வர்மா கூறியதாவது:
டில்லி நஜாப்கரில் உள்ள சவுத்ரி பிரம்ம பிரகாஷ் ஆயுர்வேத் சரக் சன்ஸ்தானில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அதன் இயக்குனர்- விதுலா குஜ்ஜார்வார் புகார் கொடுத்தார். அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது. சன்ஸ்தானின் முன்னாள் கண்காணிப்பாளர் ராஜேஷ் தன்வார் –மற்றும் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கியுள்ளது.
வழிகாட்டுதல்களை பின்பற்றாமல், முதுகலை படிப்புகளுக்கான கோப்புகளை இணைக்காமல், இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதேபோல, விதிமுறைகளை பின்பற்றாமல் கூடுதல் காலியிடங்களை உருவாக்கியுள்ளனர். மேலும், – அலோக் குமார் அஸ்தானா மற்றும் முகேஷ் குமார் சர்மா — ஆகியோர் தகுதியின்றி இணைப் பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement