ஐபோன் 15 மொபைலில் இல்லாதது இந்த மொபைலில் இருக்குது… தெறிக்கும் புது அப்டேட்!

Smartphones, Tech Tips: தமிழ் திரையுலகமும், ரசிகர்களுக்கும் அடுத்த ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களை எதிர்பார்ப்பதை போல, டெக் உலகம் Samsung Galaxy S24 Ultra மொபைலுக்கு காத்திருக்கின்றனர் எனலாம். படங்களின் ரிலீஸ் தேதிக்கூட தற்போது முன்கூட்டியே தெரிந்துவிடும் என்றாலும் சாம்சங் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகிறது என்ற தேதி மட்டும் தற்போது வரை அறிவிக்கப்படவே இல்லை. இந்தியாவில் கூடிய விரைவில் இந்த மொபைல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். 

அந்த வகையில், ஐபோன் உள்ளிட்ட மொபைல்களில் இல்லாதது அப்படி என்ன இந்த Samsung Galaxy S24 Ultra ஸ்மார்ட்போனில் இருக்கிறது என பலரும் கேட்கலாம். ஆனால் மற்ற மொபைல்களை விட வலிமையான பல அம்சங்கள் இதில் இருக்கிறது என்பதை அதுதொடர்பாக கசிந்து வரும் தகவல்கள் நமக்கு தெரிவிக்கின்றன எனலாம். 

இந்நிலையில், சமீபத்தில் அதன் கேமரா குறித்து கசிந்த தகவல்களின்படி, Apple iPhone 15 Pro Max மொபைலில் இல்லாத ஒரு அம்சம், Samsung Galaxy S24 Ultra மொபைலில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. அதுகுறித்து இதில் காண்போம்.

Samsung Galaxy S24 Ultra ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை சீன டிப்ஸ்டர் ஒருவர் தகவல் அளித்துள்ளார். இதன்படி, கைபேசியில் மேம்பட்ட டெலிஃபோட்டோ கேமரா இருக்கும் என கூறப்படுகிறது. இது 5x ஆப்டிகல் ஜூம் (Optical Zoom) வசதியை வழங்கும். இதன் மூலம், இந்த மொபைலில் இருந்து எடுக்கப்படும் புகைப்படங்களின் தரம் மிகவும் நன்றாக இருக்கும். 

புகைப்படத்தின் சிறிய விஷயங்கள் கூட மிக மிக தெளிவாக தெரியும். சீன டிப்ஸ்டர் X தளத்தில் பகிர்ந்த புகைப்படத்தின்படி, “Samsung Galaxy S24 Ultra மொபைல் 50MP கேமராவைக் கொண்டிருக்கும். இந்த மொபைல் 6,120×8,160 பிக்சல் ரெஸ்சோல்யூஷன் கொண்ட புகைப்படங்களை எடுக்க முடியும். முன்னதாக, Apple iPhone 15 Pro Max டெட்ராபிரிசம் டெலிஃபோட்டோ லென்ஸை வழங்கியது. இது 5x ஆப்டிகல் ஜூமை ஆதரிக்கிறது.

எப்போது வெளியாகும்?

சமீபத்தில் டெக் தொடர்பான விஷயங்களை சமூக வலைதளங்களில் பகிரும் இவான் பிளாஸ், Samsung Galaxy Unpacked 2024 வெளியீட்டு நிகழ்வு தொடர்பான டீஸர் படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்வில் Galaxy S24 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு ஜனவரி 18ஆம் தேதி அன்று இந்திய நேரப்படி பிற்பகல் 11.30 மணி நடைபெறும். 

இருப்பினும், மொபைலின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை என்பதையும் நினைவில்கொள்வும். @chunvn8888 என்ற X பயனர் Samsung Galaxy S24 Ultra மொபைலின் கேமரா மாடலின் புகைப்படத்தை வெளியிட்டார். இந்த புகைப்படம் SM-G928U இன் மாடல் எண்ணைக் காட்டுகிறது. இது வரவிருக்கும் அந்த சாம்சங் போனோடு தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.