வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை 25 ம் தேதிமுதல் 29 ம் தேதி வரையில் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து இருப்பதாவது: நாளை 25 ம் தேதி முதல் 29 ம் தேதி வரையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சுற்றுப்பயணத்தின் போது அவர் அந்நாட்டின் துணை பிரதமர், தொழிற்துறைஅமைச்சர், வர்த்தகத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து உலகில் நிலவி வரும் சூழ்நிலைகள் குறித்து பேசுகிறார். மேலும் அங்கு நடைபெறும் உயர்மட்ட கூட்டத்திலும் கலந்து கொண்டு இருநாடுகளிடையே ஒப்பந்த பரிமாற்றமும் செய்து கொள்கிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement