வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பை மத்திய அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக இருந்த பா.ஜ., எம்.பி., பிரிஜ் பூஷன் சிங், பாலியல் புகாரில் சிக்கினார். இவருக்கு எதிராக, மல்யுத்த நட்சத்திரங்கள் வினேஷ் போகத், சாக் ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். இதனிடையே சமீபத்தில் நடந்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலில் பிரிஜ் பூஷன் ஆதரவாளர்கள் மொத்தமுள்ள 15 பதவிகளில் 13ல் வெற்றி பெற்றனர்.
பிரிஜ் பூஷனுக்கு நெருக்கமான சஞ்சய் சிங் தலைவர் ஆனார். இதற்கு மல்யுத்த வீரர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். சாக்ஷி மாலிக் மல்யுத்த போட்டியில் இருந்து விலகினார். பஜ்ரங் புனியா ‛ பத்ம ஸ்ரீ விருதை திருப்பி கொடுத்தார். வீரேந்தர் சிங்கும் ‛ பத்ம ஸ்ரீ’ விருதை திருப்பித் தர முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை, மத்திய அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. கூட்டமைப்பிற்கு தேர்வான அனைவரும் பிரிஜ் பூஷன் கட்டுப்பாட்டில் உள்ளனர் என தெரிவித்துள்ள மத்திய அரசு, அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement