Drama for election! | தேர்தலுக்கான நாடகம்!

தேர்தலுக்கான நாடகம்!

அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும்; எந்த மதமும் வன்முறையை போதிக்கவில்லை. அன்பு, சகோதரத்துவம், பரிவையே போதிக்கின்றன. தேர்தல் வரும் போது, அரசியலுக்காக மட்டும் மற்ற மதங்களை மதிப்பதை நாங்கள் நம்பவில்லை.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,

முடிவெடுக்க அனுமதி!

அழைப்பை ஏற்று ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்றால், பா.ஜ.,வின் வழிக்கு வந்து விட்டார் என்று பேசுவர். போகாவிட்டால், ஹிந்துக்களை மதிக்கவில்லை என்று பேசுவர். இந்த விஷயத்தில் சுயமாக முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும்.

சசி தரூர்

லோக்சபா எம்.பி., – காங்.,

பா.ஜ.,வுக்கு வெற்றி!

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் உள்ள பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால், லோக்சபா தேர்தலில், பா.ஜ., 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும்.

சாம் பிட்ரோடா

மூத்த தலைவர், காங்.,

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.