Mahindra XUV400 Pro Varaints – மஹிந்திரா XUV400 EV புரோ காரின் புதிய வேரியண்ட் விபரம் வெளியானது

மஹிந்திரா நிறுவனத்தின் XUV400 EV எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் EC Pro மற்றும் EL Pro என இரு விதமான வேரியண்ட் விற்பனைக்கு ஜனவரி 2024ல் வாய்ப்புள்ளது. புதிய வேரியண்ட் உடன் டிசைன் மாற்றங்களுடன் கூடுதலாக XUV300 EV குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

2024 ஆம் ஆண்டு மஹிந்திரா நிறுவனம் புதிய தார் அர்மடா உள்ளிட்ட மாடல்களுடன் XUV.e8 எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகியவற்றை வெளியிட உள்ளது.

Mahindra XUV400 EV Pro

புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், கீலெஸ் என்ட்ரி, பின்புறத்தில் USB சார்ஜிங் போர்ட், ரியர் ஏசி வென்ட்கள், ஓசிபிஐ ஹப் ஒருங்கிணைப்பு மற்றும் இரண்டு யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்கள் போன்ற அம்சங்களில் இருந்து EC புரோ வேரியண்டில் வரவுள்ளது. இந்த மாடலில் 148 hp பவர் மற்றும் 310 Nm டார்க் உடன் 34 kWh பேட்டரி பெற்று அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜ் மூலம் 250 கிமீ ரேஞ்ச் வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக இரண்டு வேரியண்டும் மணிக்கு 150 கிமீ வேகத்தை எட்டும் நிலையில், அடுத்த EL Pro வேரியண்ட் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ டிம்மிங் IRVM, முன்புற பனி விளக்கு, ஆறு ஸ்பீக்கர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலுக்கான இரட்டை 10.25-இன்ச் திரை ஆகியவற்றைப் பெறும்.

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு, வயர்லெஸ் சார்ஜர், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டாஷ்போர்டு, ஷார்க் ஃபின் ஆண்டெனா மற்றும் புதிய ஸ்டீயரிங் ஆகியவற்றை கொண்டிருக்கலாம்.

148 hp பவர் மற்றும் 310 Nm டார்க் உடன் 34 kWh பேட்டரி பெற்று அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜ் மூலம் 250 கிமீ ரேஞ்ச், கூடுதலாக வரவுள்ள 39.4 kwh பேட்டரி மூலம் சிங்கிள் சார்ஜ் மூலம் 290 கிமீ வெளிப்படுத்துகின்றது. டாப் வேரியண்டில் 6 ஏர்பேக்குகள் பெறும் நிலையில் ADAS தொகுப்பினை பெறவில்லை.

xuv400 pro

மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு போட்டியாக டாடா நெக்ஸான் EV LR, எம்ஜி இஜட்எஸ் EV மற்றும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் ஆகியவற்றுடன் போட்டியிட உள்ளது.

image source

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.